Home அரசியல் ’அண்ணாவின் இருமொழிக் கொள்கையைக் கைவிட போகிறதா தமிழ்நாடு அரசு?’ கி.வீரமணி கேள்வி

’அண்ணாவின் இருமொழிக் கொள்கையைக் கைவிட போகிறதா தமிழ்நாடு அரசு?’ கி.வீரமணி கேள்வி

2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது..அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.

புதிய கல்விக் கொள்கை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் தீமைகள், ஆபத்துகள், மாநில உரிமைப் பறிப்புகள், குலக்கல்வியாக உருவெடுக்கக் கூடிய பேரபாயம், இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்புள்ள கொடுமை – ஏழைகளுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் – பட்டப்படிப்பு இனி எளிதில் எட்டாக்கனி என்பது போன்ற பலவற்றை உள்ளடக்கியுள்ள திட்டம். இதனை மாநில அரசுகள், குறிப்பாக தமிழ்நாடு போன்ற ஒடுக்கப்பட்டோர் கல்விக்காக அரும்பாடுபட்ட திராவிடர் இயக்கம், கல்வி வள்ளல் காமராசர் ஆட்சி – இவற்றால் சாதனை படைத்துத் திராவிடர் ஆட்சிகளில் அது மேலும் பெருகி வருவதைத் தடுக்கும் திட்டம் என்பதை ஆழ்ந்து பரிசீலித்தாலாயொழிய பலருக்கு இது எளிதில் புரியாது. மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேய்பவர்களுக்கு இது மேலான திட்டமாகவே தோன்றக்கூடும்.

தமிழ்நாடு அரசும் முதல்வரும், அமைச்சரவையும் இன்னும் சில நாட்களில் இதுபற்றி முடிவு எடுக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன! அவர்கள் ஆழ்ந்து பரிசீலித்து, தெளிவான, துணிவான முடிவு எடுக்கத் தவறக்கூடாது என்பது நமது வேண்டுகோள் ஆகும்!

மத்திய அரசின் செயல்பாடு ஏற்கத்தக்கதா?

மாநிலங்களின் அதிகாரமாகிய ‘ஒத்திசைவுப் பட்டியலான’ (Concurrent List) என்ற பட்டியலில் கல்வி உள்ளது என்பதை அறவே புறந்தள்ளிவிட்டு, கல்வி ஏதோ யூனியன் லிஸ்ட்டுக்கு – மத்திய அரசின் ஏகபோகத்திற்கே மாற்றப்பட்டதுபோல் செயல்படுவது ஏற்கத்தக்கதா?

நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் நடத்தப்படாமலேயே இதற்கு ஒப்புதல் அளிப்பது – அதுவும் கரோனா தொற்று ஊரடங்கு, நாடாளுமன்றம் கூடாமலிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி இப்படி முடிவு செய்வது – மக்கள் விரோத, ஜனநாயக நடைமுறைக்கு விரோத நடவடிக்கை அல்லவா?

anna_ மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதம், ஹிந்தித் திணிப்புக்கு இது இடமேற்படுத்தும்.

அறிஞர் அண்ணா ஆட்சியில், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இருமொழித் திட்டத்தினை – கலைஞரும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முதல்வர்களாக இருந்து தொடர்ந்து 50 ஆண்டுகளுக்குமேலாக தொடர்ந்த நிலைப்பாட்டினை இவ்வாட்சி கைவிடப் போகிறதா?

தீராப் பழியை ஏற்கப் போகிறதா  எடப்படியார் அரசு!

அது பெரும் வரலாற்றுப் பிழையாகிவிடும் அல்லவா? தீராப்பழியை அ.தி.மு.க. அரசு – எடப்பாடியார் தலைமையில் உள்ள அரசு ஏற்கப் போகிறதா?’ உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார் கி.வீரமணி

 

 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

கண்மாயில் மூழ்கி 19 வயது இளைஞர் உயிரிழப்பு

சிவகங்கை சிவகங்கை அருகே கண்மாயில் குளித்தபோது நீரில் மூழ்கி 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள...

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்: சர்ச்சையில் சிக்கிய முதல் பரிசு பெற்ற நபர்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்த நபர் முதல் பரிசு பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த 16ம் தேதி கோலாகமாக நடத்தப்பட்டது....

திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகலா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. ரொம்பவும் வலுவான கூட்டணியாகவும் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் கூட்டணியாகும் கருதப்படுவது திமுக கூட்டணியே.

சசிகலாவைச் சுற்றி மாஸ்க் அணியாத அத்தனை பேரா? – புது சர்ச்சை!

சசிகலா உடல்நிலை பற்றிய செய்திகளின் அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன. ஜெயலலிதா சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான தீர்ப்பு வெளிவந்த போது ஜெயலலிதா உயிரோடு இல்லை. அதனால் சசிகலா உள்ளிட்ட...
Do NOT follow this link or you will be banned from the site!