×

‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே…!’ : எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 1940 இல் பிறந்தவர் கந்தசாமி. இவர் 1968 இல் எழுதிய சாயாவனம் என்ற நாவல் அவருக்கான தனி அடையாளத்தை எழுத்தாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது மேலும் இந்த நாவல் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு எழுத்தாளர் கந்தசாமி ‘விசாரணை கமிஷன்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதை பெற்றார். இதயப்
 

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 1940 இல் பிறந்தவர் கந்தசாமி. இவர் 1968 இல் எழுதிய சாயாவனம் என்ற நாவல் அவருக்கான தனி அடையாளத்தை எழுத்தாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது மேலும் இந்த நாவல் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு எழுத்தாளர் கந்தசாமி ‘விசாரணை கமிஷன்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதை பெற்றார்.

இதயப் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்த சா. கந்தசாமி (80)சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு கலைத் துறையினர் மற்றும் எழுத்தாளர் சங்கத்தினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “மறைந்தாரே சா.கந்தசாமி! ‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே! தன்மானம் – தன்முனைப்பு
தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ! சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.