×

“விரைவில் குணமடையுங்கள் சூர்யா”… தளபதி படத்தை நினைவூட்டிய மம்முட்டி!

மம்முட்டி மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்த படம் தளபதி. 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவானது. இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிறுவயதிலேயே தாயாரால் அனாதையாக விடப்படுகின்றார் நடிகர் சூர்யா (ரஜினிகாந்த்). இதனைத் தொடர்ந்து ஏழைகளுடன் வாழ்க்கை நடத்தும் சூர்யா நல்ல மனிதராக உருவெடுக்கின்றார். நல்ல செயல்கள் பல செய்யும் சூர்யா ஒரு சமயம் பெண்ணொருவரைத் தாக்க முற்பட்டவனைத் தாக்கியபோது அவன் இறந்துவிடுகின்றான். இதனால் சூர்யா கைது
 

மம்முட்டி மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்த படம் தளபதி. 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவானது. இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிறுவயதிலேயே தாயாரால் அனாதையாக விடப்படுகின்றார் நடிகர் சூர்யா (ரஜினிகாந்த்). இதனைத் தொடர்ந்து ஏழைகளுடன் வாழ்க்கை நடத்தும் சூர்யா நல்ல மனிதராக உருவெடுக்கின்றார்.

நல்ல செயல்கள் பல செய்யும் சூர்யா ஒரு சமயம் பெண்ணொருவரைத் தாக்க முற்பட்டவனைத் தாக்கியபோது அவன் இறந்துவிடுகின்றான். இதனால் சூர்யா கைது செய்யப்படுகின்றார். ஆனால் அவரை விடுதலை செய்ய ஏற்பாடு செய்கின்றார் அவ்வட்டாரத் தலைமை அதிகாரத்தினை உடையவரான தேவ்ராஜ் (மம்முட்டி). தனது குழுவில் ஒருவனையே சூர்யா கொன்றுள்ளான் என்பதனைத் தெரிந்தும் அவன் செய்த நல்ல குணத்தினால் காப்பாற்றுகின்றார். பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர். நட்பை மையமாக கொண்டு வெளிவந்த இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. தேவா- சூர்யா காமினேஷன் மக்கள் மத்தியில் பல ஆண்டுகள் பேசப்பட்டது.

20 ஆண்டுகளாக நட்பை நினைவில் வைத்துக்கொண்டு நடிகர் மம்முட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில், “விரைவில் குணமடையுங்கள் சூர்யா… அன்புடன் தேவா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி, படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறூதியானதால், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். நேற்று காலையில் அவருக்கு உடல் சோர்வு அதிகமாக இருந்ததால் ஐதரபாத் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரஜினிக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்றும், ரத்த அழுத்த பிரச்சனை இருப்பதும் தெரியவந்தது.