“கிராம சபை கூட்டம் நடத்தும் திமுகவினரை பல்வேறு இடங்களில் மக்கள் விரட்டி அடிக்கின்றனர்”

 

“கிராம சபை கூட்டம் நடத்தும் திமுகவினரை பல்வேறு இடங்களில் மக்கள் விரட்டி அடிக்கின்றனர்”

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “ நாளை நடைபெற உள்ள முதல் பிரச்சாரக் கூட்டத்திற்கு யாரை அழைக்க வேண்டும் வேண்டாம் என முடிவு செய்வது ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. அவர்கள் ஏன் பிரச்சார கூட்டத்திற்கு தேமுதிகவை அழைக்கவில்லை என தெரியவில்லை. திமுக நடத்தும் கிராம சபை கூட்டங்களால் திமுக 10% வாக்குகளை இழக்கிறது. மேலும் திமுகவினரை மக்கள் பல்வேறு பகுதிகளில் விரட்டி அடித்துவருகின்றனர்.

“கிராம சபை கூட்டம் நடத்தும் திமுகவினரை பல்வேறு இடங்களில் மக்கள் விரட்டி அடிக்கின்றனர்”

தமிழகத்தில் அதிமுகாவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் யார் என்பதை பிஜேபி தான் முடிவு செய்து அறிவிக்கும் என முருகனோ வானதி சீனிவாசனோ அறிவிக்கமுடியாது. ஏனெனில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம் தான். இந்த கூட்டணியில் இங்கு யார் முதல்வர் என்று அவர்கள் அறிவிக்க முடியாது. இன்னும் ஓரிரு நாள்களில் தமிழகத்திற்கு வருகை தரும் அவர் தேசிய கட்சி தலைவர் ஜேபி நட்டா தான் இதுகுறித்து அறிவிப்பார்’ என தெரிவித்தார்