பாஜகவில் இணைய போகிறேனா? நடிகை குஷ்பு விளக்கம்!

 

பாஜகவில் இணைய போகிறேனா? நடிகை குஷ்பு விளக்கம்!

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதை காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்த நிலையில் அதன் அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு வரவேற்பு தெரிவித்திருந்தார். இதனால் சர்ச்சை உண்டானது. இதற்கு பதிலளித்த குஷ்பு,” புதிய கல்விக்கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது , அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன்” என்றார்.

பாஜகவில் இணைய போகிறேனா? நடிகை குஷ்பு விளக்கம்!

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தனது டிவிட்டர் பக்கத்தில், “காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதன் பெயர் முதிற்சியின்மை” என்றும் “கட்சிக்கு வெளியே கருத்துக் கூறுவது லாபம் எதிர்பார்ப்பது போல் உள்ளது . ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் குஷ்பு பாஜகவில் சேர போவதாக செய்திகள் வெளியாகின.

பாஜகவில் இணைய போகிறேனா? நடிகை குஷ்பு விளக்கம்!

இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள நடிகை குஷ்பு, ” நான் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன். பாஜகவில் நான் சேர போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை” என்று கூறியுள்ளார்.