நடிகை குஷ்பு பாஜகவில் இணைய போவதாக தகவல்?

 

நடிகை குஷ்பு பாஜகவில் இணைய போவதாக தகவல்?

சென்ற ஆண்டு 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது..அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.

நடிகை குஷ்பு பாஜகவில் இணைய போவதாக தகவல்?

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, “அதில், புதிய கல்விக்கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது என்றும், அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

தலைமைக்கு தலையாட்டும் ரோபோவாகவோ, கைப்பாவையாகவோ ஒரு போதும் இருக்க மாட்டேன். உண்மையை பேசுகிறேன். நான் காங்கிரஸில் தான் இருப்பேன், பாஜகவுக்கு செல்லவில்லை. என் கருத்து கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம் ஆனால், நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர். புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்கிறேன்” என தெரிவித்துள்ளார்.