பட்டாசு ஆலை விபத்தில் 7 மாத கர்ப்பிணி உடல் கருகி பலி : உயிரிழந்தவர்களின் விவரங்கள் இதோ!

பட்டாசு ஆலை விபத்தில் 7 மாத கர்ப்பிணி உடல் கருகி பலி : உயிரிழந்தவர்களின் விவரங்கள் இதோ!

விருதுநகரில் நடந்துள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பட்டாசு ஆலை விபத்தில் 7 மாத கர்ப்பிணி உடல் கருகி பலி : உயிரிழந்தவர்களின் விவரங்கள் இதோ!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 19 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். அத்துடன் படுகாயமடைந்த பலர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , தமிழக அரசு நிவாரண தொகையாக ரூ.3 லட்சம் தரப்படும் என்று கூறியுள்ளது. அத்துடன் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் குத்தகைதாரர்கள் 3பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து ஏழாயிரம்பண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டாசு ஆலை விபத்தில் 7 மாத கர்ப்பிணி உடல் கருகி பலி : உயிரிழந்தவர்களின் விவரங்கள் இதோ!

இந்நிலையில் பட்டாசு ஆலையில் நடுசூரங்குடி 7 மாத கர்ப்பிணி நாகவள்ளி உள்ளிட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அன்பின் நகரம் சந்தியா, மேலப்புத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி, நேசமணி, படந்தால் கோபால் உயிரிழந்தனர். ரவிசந்திரன்ம் ரங்கராஜ், செல்வி, ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த தங்கலட்சுமி, கண்ணன், நாராயணன் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பாக்கியராஜ், கருப்பசாமி என 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் இறந்த நிலையில் இன்னும் 6பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.