கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 45 பேர் டிஸ்சார்ஜ்!

கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 45 பேர் டிஸ்சார்ஜ்!

சென்னையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியாக அமைக்கப்பட்ட சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1050-க்கும் மேற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் கொடுக்கப்பட்டு அவர்களில் 750-பேர் முழுமையாக நலம் பெற்றுத் திரும்பியுள்ளனர், 300-பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒரு உயிரிழப்புக் கூட ஏற்படவில்லை என அம்மருத்துவமனையின் மருத்துவர் வீரபாபு தெரிவித்திருக்கிறார்.

கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 45 பேர் டிஸ்சார்ஜ்!

இதனால் கொரோனா நோய் பரவியிருக்கும் மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்றாக சித்த மருத்துவமனைகளைத் திறந்து, சித்த மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்க முன் வர பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 45 பேர் டிஸ்சார்ஜ்!

இந்நிலையில் சென்னை வியசார்பாடியில் கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 45 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். சித்த மருத்துவர் சாய் சதீஷ் தலைமையிலான குழுவினர் சிகிச்சை வழங்கி வரும் இந்த மருத்துவமனையில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு இதுவரை 208 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.