யாருக்கு எத்தனை சீட்டு? ஐபேக் பட்டியலை கொஞ்சம் மாற்றும் ஸ்டாலின்

 

யாருக்கு எத்தனை சீட்டு? ஐபேக் பட்டியலை கொஞ்சம் மாற்றும் ஸ்டாலின்

ஐபேக் பிரசாந்த் கிஷோரும் மு.க.ஸ்டாலின் இருவர் மட்டுமே ஆலோசித்து கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது குறித்த முடிவினை சில மாதங்களுக்கு முன்பே எடுத்துவிட்டார்கள்.

திமுகவுக்கு ஏற்கனவே120 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. கூடுதலாக 50 தொகுதிகளிலாவது வெற்றி பெற வைத்தால்தான் தனக்கு மரியாதை. அதற்கு 200 தொகுதிகளில் திமுக போட்டியிட்டால்தான் அது சாத்தியமாகும் என்று சொல்லி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

யாருக்கு எத்தனை சீட்டு? ஐபேக் பட்டியலை கொஞ்சம் மாற்றும் ஸ்டாலின்

கூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா? என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின். சரிப்பட்டு வருமா? வராதா? என்றெல்லாம் டென்ஷன் ஆக வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே நேரடியாக பேசினால்தான் இந்த சங்கடம். காங்கிரசை பொறுத்தவரைக்கும் மேல்மட்டத்தில் நானே பேசிக்கொள்கிறேன். மற்ற கட்சிகளிடம் சீனியர் ஒருவரை வைத்து பேசிவிடலாம் என்று பிரசாந்த் கிஷோர் சொன்னதற்கு சம்மதித்துள்ளார் ஸ்டாலின்.

யாருக்கு எத்தனை சீட்டு? ஐபேக் பட்டியலை கொஞ்சம் மாற்றும் ஸ்டாலின்

இந்த கணக்கில்தான் திமுக 200தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், கூட்டணிக்கு 34 தொகுதிகளில் காங்கிரசுக்கு 11, மதிமுகவுக்கு 5, சிபிஎம்க்கு 4, சிபிஐக்கு 4, விசிகவுக்கு 2, மமகவுக்கு 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2, ஐஜேகே, பார்வர்ட் பிளாக், டிவிகே, கே.எம்.டி.கே.வுகு தலா 1 சீட் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஐஜேகே தொடக்கத்திலேயே வெளியேறிவிட்டது. இரட்டை இலக்கத்தில் கேட்ட திருமாவுக்கு இரட்டை விரலை காட்டியதும், 11 என்று நினைத்து முதலில் சந்தோசப்பட்டிருக்கிறார். வெறும் 2தான் என்று விளக்கிச்சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். அப்புறம் ஸ்டாலின் தலையிட்டுத்தான், 2 ஐ 6 ஆக மாற்றியிருக்கிறார்.

யாருக்கு எத்தனை சீட்டு? ஐபேக் பட்டியலை கொஞ்சம் மாற்றும் ஸ்டாலின்

கடந்த முறை மாதிரியே இந்த முறையும் 41 ஐ எதிர்பார்த்த காங்கிரசுக்கு 11தான் என்றதால், கே.எஸ்.அழகிரி கண்ணீர் விடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டார். நிலைமையை உணர்ந்த ஸ்டாலின், காங்கிரஸ் 21 என்ற முடிவுகு வந்துவிட்டார். ஆனால் இன்னமும்6 சீட்டு கேட்டு நிற்கிறது காங்கிரஸ். மதிமுகவுக்கு அதே 5 என்ற நிலையிலும் மாறிவிட்டதாக தகவல். 4தான் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். கம்யூஸ்டுகள் தலா 4 என்ற நிலையில் இருந்து 6 என மாற்றப்பட்டிருக்கிறது.

யாருக்கு எத்தனை சீட்டு? ஐபேக் பட்டியலை கொஞ்சம் மாற்றும் ஸ்டாலின்

ஐபேக் கொடுத்த லிஸ்டை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டார் ஸ்டாலின் என்று சொல்லி வந்த கூட்டணிக்கட்சிகளின் நம்பிக்கையை உடைத்துவிட்டார் ஸ்டாலின். கூட்டணி கட்சியினர் கண்ணீர் விட்டாலும், மொத்தமே 34தான் என்று முடிவெடுத்துவிட்டு, இப்படி கூட்டிகுறைக்க வேண்டியாகிவிட்டதே என்று நகம்கடிக்கிறதாம் அறிவாலயம்.