காங்.,-11, மதிமுக -5, விசிக, மமக-தலா 2, கம்யூ., – தலா 4, : கூட்டணிக்கு 34ஐ இறுதி செய்த திமுக

காங்.,-11, மதிமுக -5, விசிக, மமக-தலா 2, கம்யூ., – தலா 4, : கூட்டணிக்கு 34ஐ இறுதி செய்த திமுக

ஐபேக் பிரசாந்த் கிஷோரும் மு.க.ஸ்டாலின் இருவர் மட்டுமே ஆலோசித்து திமுக கூட்டணிக்காக எத்தனை சீட் என்பது குறித்த முடிவினை எடுத்திருக்கிறார்கள். இது குறித்து திமுக சீனியர்கள் சிலர் வழியாக தகவல் கசிந்திருக்கிறது.

காங்.,-11, மதிமுக -5, விசிக, மமக-தலா 2, கம்யூ., – தலா 4, : கூட்டணிக்கு 34ஐ இறுதி செய்த திமுக

திமுக வெற்றி பெற வேண்டும் என்பதில் ஸ்டாலினை விடவும் பிரசாந்த் கிஷோர்தான் அதிக டென்ஷனில் இருக்கிறாராம். இதில், திமுக வெற்றி பெற்றுவிட்டால் தனது ஐபேக் நிறுவனத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறாராம். அதனால்தான் அவர் சொல்வதை வேத வாக்காக நினைத்து மறுப்பேதும் சொல்வதில்லையாம் ஸ்டாலின்.

திமுகவுக்கு ஏற்கனவே120 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. கூடுதலாக 50 தொகுதிகளிலாவது வெற்றி பெற வைத்தால்தான் தனக்கு மரியாதை. அதற்கு 200 தொகுதிகளில் திமுக போட்டியிட்டால்தான் அது சாத்தியமாகும் என்று சொல்லி இருக்கிறார்.

காங்.,-11, மதிமுக -5, விசிக, மமக-தலா 2, கம்யூ., – தலா 4, : கூட்டணிக்கு 34ஐ இறுதி செய்த திமுக

கூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா? என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.

சரிப்பட்டு வருமா? வராதா? என்றெல்லாம் டென்ஷன் ஆக வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே நேரடியாக பேசினால்தான் இந்த சங்கடம். காங்கிரசை பொறுத்தவரைக்கும் மேல்மட்டத்தில் நானே பேசிக்கொள்கிறேன். மற்ற கட்சிகளிடம் சீனியர் ஒருவரை வைத்து பேசிவிடலாம் என்று பிரசாந்த் கிஷோர் சொன்னதற்கு சம்மதித்துவிட்டாராம் ஸ்டாலின்.

காங்.,-11, மதிமுக -5, விசிக, மமக-தலா 2, கம்யூ., – தலா 4, : கூட்டணிக்கு 34ஐ இறுதி செய்த திமுக

இந்த கணக்கில்தான் திமுக 200தொகுதிகளில் போட்டியிடுவது என்று உறுதியாகி இருக்கிறது. கூட்டணிக்கு 34 தொகுதிகளில் காங்கிரசுக்கு 11, மதிமுகவுக்கு 5, சிபிஎம்க்கு 4, சிபிஐக்கு 4, விசிகவுக்கு 2, மமகவுக்கு 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2, ஐஜேகே, பார்வர்ட் பிளாக், டிவிகே, கே.எம்.டி.கே.வுகு தலா 1 சீட் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

காங்.,-11, மதிமுக -5, விசிக, மமக-தலா 2, கம்யூ., – தலா 4, : கூட்டணிக்கு 34ஐ இறுதி செய்த திமுக

காங்கிரஸ் 25 தொகுதிகளுக்கு மேலும், மதிமுக 20 தொகுதிகளுக்கு மேலும் எதிர்பார்த்து இருக்கின்றன. கம்யூஸ்டுகள் தலா 10 இடங்களூக்கு மேல் எதிர்பார்த்து இருக்கின்றன. விசிகவும்,ஐஜேகேவுமே 10 நம்பரைத்தான் விரும்பி காத்திருக்கிறார்கள். இதில், 10 சீட் தரவில்லை என்றால் தனித்துதான் போட்டி என்று ஐஜேகே பொதுச்செயலாளர் அறிவித்திருக்கிறார்.

எதிர்பார்ப்புகள் இப்படி இருக்கும்போது மொத்தமே 34தான் என்று ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டதால், கூட்டணியில் பெரும் குழம்பம் தான் ஏற்படும் என்று தெரிகிறது.