ரஜினிகாந்த் தப்பித்தார்…

 

ரஜினிகாந்த் தப்பித்தார்…

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் பாஜகவுக்கு ஆதரவு தருவார் என்ற கணக்கில் அவரை கட்சிதொடங்கச் சொல்லி அமித்ஷா ஆதரவாளர் ‘துக்ளக்’குருமூர்த்தி அழுத்தம் கொடுத்து வந்ததாக செய்திகள் வந்தன. ரஜினியின் மனைவி லதாவையும் திருப்பதியில் சந்தித்து குருமூர்த்தி அழுத்தம் கொடுத்ததாகவும் சமுக வலைத்தளங்களில் செய்திகள் வந்தன.

ரஜினிகாந்த் தப்பித்தார்…

ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்த பின்னரும்கூட, அவர் பாஜகவுக்கு வாய்ஸ்கொடுப்பார் என்றே நம்பிக்கை கொண்டிருந்திருக்கிறார். அதுவும் நடக்காமல் போன நிலையில், ரஜினி ரசிகர்களும் அதிமுக, திமுக பக்கம் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாஜகவும், குருமூர்த்தியும் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல் வந்துகொண்டிருந்த நிலையில், துக்ளக் இதழில் ரஜினி ரசிகர்களை துவைத்து தொங்க போட்டிருக்கிறார் குருமூர்த்தி.

இதுதாண்டா அரசியல் என்ற தலைப்பில் ரஜினி ரசிகர்களை கிழி.. கிழி. கிழி.. என்று கிழித்து எடுத்திருக்கிறார். குருமூர்த்திக்கு ஏன் இத்தனை ஆத்திரம்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

காமராஜரையும், கக்கனையும் உதாரணத்திற்கு சொன்ன குருமூர்த்தி, பாஜகவில் இருந்து ஏன் ஒருவரையும் சொல்ல முடியவில்லையா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரஜினிகாந்த் தப்பித்தார்…

’ரஜினி தப்பித்தார்’ என்று அந்த கட்டுரையில் ஒரு வரி வருகிறது. அதனால், ‘’அது உண்மைதான், உங்களிடம் இருந்து ரஜினி தப்பித்தார்’’ என்ற விமர்சனம் எழுகிறது. உங்களிடம் என்று அவர்கள் சொல்வது, பாஜகவையும் குருமூர்த்தியையும்தான்.

திமுகவிலும் அதிமுகவிலும் ரஜினி ரசிகர்கள் சேருவதை, ‘இதுதாண்டா அரசியல்’ என்கிறார் குருமூர்த்தி. ரஜினி ரசிகர்களால் பாஜகவுக்கு ஆதரவு என்று நினைத்திருந்த குருமூர்த்தி, ரஜினி ரசிர்களால் இப்போது பாஜகவுக்கு லாபம் இல்லை என்று தெரிந்ததும் போட்டு பிறாண்டி எடுப்பதையும் வைத்து ‘இதுதாண்டா அரசியல்’என்கிறார்கள்.