இதுதாண்டா அரசியல்…. ரஜினி ரசிகர்களை மிக மிக மிக கேவலமாக பேசிய குருமூர்த்தி

 

இதுதாண்டா அரசியல்…. ரஜினி ரசிகர்களை மிக மிக மிக கேவலமாக பேசிய  குருமூர்த்தி

ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று சொன்னதும், செய்வதறியாது தவித்த அவரது ரசிகர்களை தங்கள் விருப்பப்பட்ட கட்சிகளில் சென்று சேர்ந்துகொள்ளலாம் என்று மன்றமே அறிவித்தவிட்டதால் அவரவர் விருப்பப்பட்ட கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். அதாவது அதிமுக, திமுக கட்சிகளில் மட்டுமே இணைந்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவில் எவரும் இணையவில்லை.

இதுதாண்டா அரசியல்…. ரஜினி ரசிகர்களை மிக மிக மிக கேவலமாக பேசிய  குருமூர்த்தி

இதனால் ஆத்திரம் கொண்டு ‘துக்ளக்’குருமூர்த்தி, ரஜினி ரசிகர்களை காரி துப்பாத குறையாக துக்ளக் இதழில் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்.

அந்த கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது: ‘’ ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்ததுமே இதுதாண்டா சமயம் என்று அவரது ரசிகர் மன்றத்தினர் படை படையாக திமுகவிலும் அதிமுகவிலும் சேர்ந்து வருகிறார்கள். எந்த ஊழலை ஒழிக்க வேண்டுமென்று ரஜினி நினைத்தாரோ, அந்த ஊழலின் பிறப்பிடமான திமுகவில் ரசிக சிகாமணிகள் சேர்ந்தது சிலருக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம்.

இதுதாண்டா அரசியல்…. ரஜினி ரசிகர்களை மிக மிக மிக கேவலமாக பேசிய  குருமூர்த்தி

ஆனால், இதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை. ரஜினிகாந்த் வேண்டுமானால் தேசியவாதியாக, ஆன்மீகவாதியாக, நேர்மையாளராக இருக்கலாம். ஆனால் அவருடைய ரசிகர்கள் காமராஜர், கக்கன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர்கள் அல்ல.

தலைவா தலைமையேற்க வா என்று ஊர் ஊருக்கு போஸ்டர் அடித்து ஒட்டியதால் தியாகத்தின் திரு உருவங்கள் அல்ல. ஆதாயத்தை எதிர்பார்க்காமலா இதையெல்லாம் செய்திருப்பார்கள். நல்ல வேளையாக ரஜினிகாந்த் தப்பித்தார்.

எல்லா கட்சிக்காரர்களையும் போலத்தான் ரஜினி ரசிகர்களுக்கும் அரசியல் என்பது பணம் பண்ணுகிற வழி. அதனால்தான் இவ்வளவு அவசர அவசரமாக கட்சிகளில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுதாண்டா அரசியல்…. ரஜினி ரசிகர்களை மிக மிக மிக கேவலமாக பேசிய  குருமூர்த்தி

எவனாவது போயும் போயும் திமுக, அதிமுகவையா தேர்ந்தெடுப்பான்? இந்த ஊழல் கட்சிகளில் சேர்ந்து வட்டச்செயலாளர், வார்டு செயலாளர் ஆனால் கூட நாலு காசு சம்பாதிக்கலாமென்று கணக்கு போட்டுத்தான் கட்சிகளில் சேர்ந்து வருகிறார்கள்.

கட்சியின் கொடியினை காரில் பறக்க விட்டுக்கொண்டு போய் கரை வேட்டி சகிதம் கவர்மெண்ட் ஆபீசுக்குள் நுழைந்தால் தானே பைல் மூவ் ஆகும்? கரை வேட்டி இல்லாமல் போய் நின்றால் எவன் மதிப்பான்? அரசு அதிகாரிகளையும், ஊழியர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு சும்மா காரியம் சாதிக்க முடியுமா? அதற்கு கட்சி பின்புலம் இருந்தால்தானே முடியும்?

சுதந்திர போராட்ட தியாகிகள் நாட்டுக்காக சொத்து சுகங்களை இழந்தது மாதிரி எல்லாவற்றையும் இழந்து நிற்க ரஜினி ரசிகர்கள் என்ன அசட்டு அம்மாஞ்சிகளா?

இதுதாண்டா அரசியல்…. ரஜினி ரசிகர்களை மிக மிக மிக கேவலமாக பேசிய  குருமூர்த்தி

போஸ்டர் அடித்த காசை எல்லாம் திரும்ப எடுக்க வேண்டாமா? இவ்வளவு நாளும் ரஜினி படத்தை போட்டு போஸ்டர் அடித்தது மாதிரி இனிமேல் ஸ்டாலின், எடப்பாடி, இத்யாதிகளின் போட்டோவை போட்டு போஸ்டர் அடித்தால்தான் பிழைப்பு நடத்த முடியும்.

அரசியல் என்பது சேவை என்று சில பத்தாம்பசலிகள் சொல்லிக்கொண்டு அலைகின்றன. சேவையாவது, வெங்காயமாவது? எல்லாம் பிழைப்பு. அரசியல் பிழைப்பு.’’

இதுதாண்டா அரசியல் என்ற தலைப்பில் அந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.