கருணாநிதி இப்படித்தான் முதல்வரானார்? ஈபிஎஸ் சொன்னதற்கு காரணம் இதுதான்!

 

கருணாநிதி இப்படித்தான் முதல்வரானார்?  ஈபிஎஸ் சொன்னதற்கு காரணம் இதுதான்!

கருணாநிதி எப்படி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அப்படித்தான் நானும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும், நான் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லை என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். எந்த முதல்வருமே நேரடியாக தேர்வாக முடியாது. சட்டமன்ற உறுப்பினர்களால்தான் தேர்வாக முடியும். நான் மக்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று பேசியிருக்கிறார்.

கருணாநிதி இப்படித்தான் முதல்வரானார்?  ஈபிஎஸ் சொன்னதற்கு காரணம் இதுதான்!

அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவர் இவ்வாறு பேசியிருப்பதால், அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது.

அண்ணாவின் மறைவுக்கு பிறகு நாவலர் நெடுஞ்செழியன் தான் முதல்வராக வந்திருக்க வேண்டும். ஆனால், கருணாநிதி முதல்வராக வந்தற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

கருணாநிதி இப்படித்தான் முதல்வரானார்?  ஈபிஎஸ் சொன்னதற்கு காரணம் இதுதான்!

எஸ்.எஸ்.ராஜேந்திரன் அப்போது திமுகவில் வலுவாக இருந்ததாலும், அவரின் பின்னால் நிறைய எம்.எல்.ஏக்கள் இருந்ததாலும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கருணாநிதி அவரிடம் கேட்டதாகவும், அதற்கு எஸ்.எஸ்.ஆர். மறுத்துவிட்டதாகவும், எம்.ஜி.ஆர். சொன்னால் எஸ்.எஸ்.ஆர். கேட்பார் என்று அவரிடம் கேட்டிருக்கிறார் கருணாநிதி. நெடுஞ்செழியன் தான் அண்ணாவுக்கு அடுத்ததாக வர வேண்டும் என்று எம்.ஜி.ஆரின் நினைத்திருந்தார்.

நண்பனுக்காக இதைச்செய்யக்கூடாதா? என்று எம்.ஜி.ஆரிடம் வற்புறுத்தியதால், எஸ்.எஸ்.ஆர். வீட்டுக்கு சாப்பிடச்சென்றுவிட்டு, சாதத்தில் கை வைக்காமல், பிடிவாதம் பிடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அவரை சாப்பிட வைக்க வேறு வழியின்றி எஸ்.எஸ்.ஆரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கருணாநிதி இப்படித்தான் முதல்வரானார்?  ஈபிஎஸ் சொன்னதற்கு காரணம் இதுதான்!

அப்போதுகூட, எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல. சரிப்பட்டு வரும்ன்னு தோணல. உங்களுக்கு அது பின்னால தெரியவரும் என்று முணுமுணுத்தபடியேதான் ஒப்புக்கொண்டாராம் எஸ்.எஸ்.ஆர்.

அரங்கண்ணனின் நினைவுகள் புத்தகத்தில் இருக்கும் தகவல்களை பார்த்தால் மேலே உள்ளவை எல்லாம் உண்மை என்றே தெரிகிறது.

அண்ணாவின் மறைவுக்கு பின்னர் நாவலர் நெடுஞ்செழியனை முதல்வராக்க எல்லோரும் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ‘’எல்லோரும் என்னைத்தான் முதல்வர் ஆக்கணும்னு சொல்லி இருக்காங்க. வேணும்னா மதியழகன், சத்தியவாணி முத்து, மனோகரன், எம்.ஜி.ஆர். எல்லோர்கிட்டயும் கேட்டுப்பாருங்க’’ என்று கருணாநிதி சொல்ல, அவர்களிடம் சென்று அரங்கண்ணல் பேசியபோது, சொல்லி வைத்தது மாதிரியே எல்லோரும், ‘’ஏன் நெடுஞ்செழியன் வரக்கூடாது?’’ என்று கேட்டிருக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க கருணாநிதி வேறு மாதிரியாக சித்தரிக்கிறாரே என்று நெடுஞ்செழியனிடம் அரங்கண்ணல் சொன்னபோது, அவர் கண்ணீர் வடித்திருக்கிறார்.

கருணாநிதி இப்படித்தான் முதல்வரானார்?  ஈபிஎஸ் சொன்னதற்கு காரணம் இதுதான்!

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. கருணாநிதி என்ன செய்தாரோ தெரியவில்லை. கட்சி கூட்டத்தில், சட்டப்பேரவை தலைவராக கருணாநிதியின் பெயரை முன்மொழிந்திருக்கிறார் வந்தவாசி வி.டி.அண்ணாமலை. உடனே , அரக்கோணம் எஸ்.ஜே. ராமசாமி வழிமொழிந்திருக்கிறார்.

அதன் பின்னர் நெடுஞ்செழியன் பெயரைச்சொன்னபோது, நடக்கும் நாடகத்தை புரிந்துகொண்டு சடாரென்று எழுந்த நெடுஞ்செழியன், ’’போட்டி இல்லாமல் என்ன தேர்ந்தெடுத்தால் சரி. இல்லை என்றால் நானே விலகிக்கொல்கிறேன்’’என்றார்.

ஆனால், கட்சியின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி. (ஈசிஆரில் உள்ள விடுதியில் துணை நடிகைகளை ……. கொடுத்துதான் கருணாநிதி முதல்வர் ஆனார் என்று அண்மையில் ஆ.ராசா செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு நிருபர் கேட்க, ராசாவுக்கு அருகில் இருந்த ஆர்.எஸ்.பாரதி, ‘’அந்த சமயத்துல எம்.ஜி.ஆரும் கூட இருந்தார். அப்படியானால் அவரும் அதுக்கு உடந்தையா?’’ என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. )

கருணாநிதி இப்படித்தான் முதல்வரானார்?  ஈபிஎஸ் சொன்னதற்கு காரணம் இதுதான்!

ஈசிஆரில் உள்ள கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் எம்.எல்.ஏக்களை தங்கவைத்து, ஈபிஎஸ்க்கு ஆதரவு கோரப்பட்டு, ஏகமனதான அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருணாநிதி இப்படித்தான் முதல்வரானார்?  ஈபிஎஸ் சொன்னதற்கு காரணம் இதுதான்!

இப்போது புரிந்திருக்கும்…. எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக முதல்வர் ஆகவில்லை என்று ஏன் சொல்கிறார் ஸ்டாலின் என்பதும், கருணாநிதி எப்படி முதல்வர் ஆனாரோ அப்படித்தான் நானும் முதல்வர் ஆனேன் என்று ஈபிஎஸ் ஏன் சொல்கிறார் என்பதும்.