குற்ற உணர்ச்சியில் பிரபாகரனிடம் தலைகுனிந்து நின்ற சீமான்!

 

குற்ற உணர்ச்சியில் பிரபாகரனிடம் தலைகுனிந்து நின்ற சீமான்!

எம்.ஜி.ஆரைப்பற்றி சின்ன வயசில் இருந்து தவறான எண்ணத்தில் இருந்தேன். காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தாலும் தமிழ் ஈர்ப்பினால் உதயசூரியனுக்கு ஓட்டு போட்டவன். திமுகவினரில் பிரச்சாரங்களால் எம்.ஜி.ஆர். நடித்த படங்களை கூட பார்க்காமல் இருந்தேன். நான் திரையுலகத்திற்கு வருவதற்கு முன்னர் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்தது இல்லை. அவர் படங்களை பார்க்கக்கூடாது என்று சத்தியம் செய்தவன். அழகு எனும் ஒற்றை வலிமையை தவிர வேறு என்ன ஈர்ப்பு இருக்கிறது எம்.ஜி.ஆரிடத்தில் என்று சொல்லித் திரிந்தேன். இப்படியெல்லாம் எம்.ஜி.ஆரை பற்றிய தவறான எண்ணத்தில் இருந்ததால்தான் ஈழத்தில் பிரபாகரன் முன்னால் வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றேன்.

குற்ற உணர்ச்சியில் பிரபாகரனிடம் தலைகுனிந்து நின்ற சீமான்!

-இது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னாள், சிறையில் இருந்து வெளியே வந்ததும், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த கூட்டத்தில் பேசியபோது தெரிவித்தது.

குற்ற உணர்ச்சியில் பிரபாகரனிடம் தலைகுனிந்து நின்ற சீமான்!

அதுமட்டுமா, எம்,ஜி.ஆர். ஒரு மலையாளி. தமிழுக்கும் தமிழருக்கும் அவர் என்ன செய்துவிட்டார் என்றே திமுக தலைவர்க சொன்னதையே நானும் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், எம்.ஜி.ஆரை இழந்தது நம் இனத்தின் விடுதலையை தள்ளிப்போட்டுவிட்டது. நமது உணர்வுகளையும், உரிமைகளையும் மனதார ஆதரித்த அந்த மனிதரை இவ்வளவு சீக்கிரம் நாம் இழந்துவிட்டோமேடா தம்பி என்று அண்ணன் பிரபாகரன் சொன்னதும் குற்ற உணர்ச்சியில் நான் குறுகிப்போய் நின்றேன்.

குற்ற உணர்ச்சியில் பிரபாகரனிடம் தலைகுனிந்து நின்ற சீமான்!

மூன்று மணி நேரம் அண்ணனிடம் பேசினால் அதில் முக்கால் மணி நேரம் எம்.ஜி.ஆர். பற்றிதான் பேசுகிறார். எம்.ஜி.ஆரை பற்றிய தவறான எண்ணங்களாள் பழுதடைந்திருந்த மூளையில் அண்ணனின் வார்த்தைகள்தான் சூடு போட்டன. நான் வெட்கத்தில் தலைகுனிந்து நின்றேன்.

குற்ற உணர்ச்சியில் பிரபாகரனிடம் தலைகுனிந்து நின்ற சீமான்!

பிரபாகரனை நெருங்கிவிட்டோம். இனி தப்பிக்க முடியாது. கனவிலும் கூட தப்பிக்க நினைக்க முடியாது என்று இந்திய அமைதிப்படை கொக்கரித்த போது, இந்திய அமைதிப்படையினை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்துவிட்ட பின்னர், அந்த ஆயுதங்களை நமது போட்டி குழுக்களுக்கே கொடுத்து போரை தூண்டிவிட்டதால், என்ன செய்வதென்றா சிந்திக்க முடியாத நிலையில் இருந்தபோது, பணப்பெட்டியோடு வந்தார் கிட்டு. தம்பி கஷ்டப்படுவார் இதை நான் கொடுத்ததாக சொல்லி அவரிடம் கொடு’ன்னு 36 லட்ச ரூபாயை கொடுத்தனுப்பியதோடு அல்லாமல், எதுவும் நடக்காது தம்பியை தைரியமாக இருக்கச்சொல் என்றும் நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி அனுப்பியிருந்தார் எம்.ஜி.ஆர். என்று சொன்ன அண்ணன், நிஜமாவே என்னை தம்பியாக நினைத்தவரப்பா எம்.ஜி.ஆர். என்று அண்ணன் சொன்னதும் அழுகையை என்னால் அடக்க முடியவில்லை என்று சொன்னார் சீமான்.

குற்ற உணர்ச்சியில் பிரபாகரனிடம் தலைகுனிந்து நின்ற சீமான்!

அந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் என்று பேசியதால் சீமான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அது குறித்து சீமான் பின்னர் எழுதிய கட்டுரை ஒன்றில், எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் என்று சீமான் எப்படிச்சொல்லலாம்? என்று கேட்கிறார்கள். ஈழம் அடைய எவ்வளவுடா தம்பி தேவப்படும் என்று எம்.ஜி.ஆர். கேட்க, 100 கோடி ரூபாய் தேவைப்படும் என்று அண்ணன் சொன்ன உடனேயே, கொஞ்சமும் யோசிக்காமல், நான் தர்றேன்.. நீ நல்லா சண்டை பிடி..ன்னு தைரியம் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அவரைப்பற்றி பேசாமல் தமிழ் தமிழ் என்று வாய் முழுக்க முழங்கிவிட்டு அந்த தமிழருக்கே வாய்க்கரிசி போட்டவரை பற்றியா பேசச் சொல்கிறீர்கள்? உலகத்தின் எந்த புரட்சியாளனுக்கு சற்றும் குறைவில்லாத புரட்சியாளன் அண்ணன் பிரபாகரன். அவருக்குதுணைநின்ற எம்.ஜி.ஆரை புரட்சியாளர் என்று சொல்லாமல் வேறு யாரைச்சொல்வது?

குற்ற உணர்ச்சியில் பிரபாகரனிடம் தலைகுனிந்து நின்ற சீமான்!

அமைதிப்படை துவம்சம் செய்துகொண்டிருந்த வேளையில் ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர். எங்கே? எத்தனை பேர் இறந்தால் எனக்கென்ன என்று இருந்து, இருக்கையே பத்திரம் என்று பிடித்துக்கொண்டு இரு கைகளையும் விரித்து காட்டியவர்கள் எங்கே? என்று கேட்டிருந்தார்.

எம்.ஜி.ஆரை அத்தனை உயரத்திற்கு தூக்கிப்பிடித்த சீமான் இப்போது, எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி செய்தார் என்று கீழே போட்டு உடைக்கிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.