ரஜினி மட்டும் தனியாக அமெரிக்கா புறப்பட்டார்;13 பேரை உடன் அழைத்து செல்ல அனுமதி மறுப்பா

ரஜினி மட்டும் தனியாக அமெரிக்கா புறப்பட்டார்;13 பேரை உடன் அழைத்து செல்ல அனுமதி மறுப்பா

த்தார் ஏர்லைன்ஸ் மூலமாக சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த். கத்தார் ஏர்லைன்ஸ் மூலம் தோஹா செல்லும் ரஜினி, அங்கிருந்து வேறு விமானம் மூலமாக அமெரிக்கா செல்கிறார்.

ரஜினி மட்டும் தனியாக அமெரிக்கா புறப்பட்டார்;13 பேரை உடன் அழைத்து செல்ல அனுமதி மறுப்பா

ரஜினிகாந்துடன் 13 பேர் உடன் செல்வதாக இருந்த நிலையில், ரஜினிகாந்த் மட்டும் தனியாக செல்கிறார். அமைச்சர்கள் அனுமதி அளித்தும் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என்ற செய்திகள் பரவிய நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக ரஜினிகாந்த் மட்டும் தனியாக சென்றிருக்கிறார். அதே நேரம் ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மட்டும் உடன் சென்றார் என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினி மட்டும் தனியாக அமெரிக்கா புறப்பட்டார்;13 பேரை உடன் அழைத்து செல்ல அனுமதி மறுப்பா

அமெரிக்காவில் ரோசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் ரஜினிக்கு சிகிச்சை நடைபெற இருக்கிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவில் உள்ள மிகச்சிறந்த மருத்துவமனை மயோ கிளினிக் என்று கூறப்படுகிறது. இந்த மயோ கிளினிக்கில் சிகிச்சை மேற்கொள்ளத்தான் சென்னையில் இருந்து 14 ஆயிரம் கிலோமீட்டர் பறந்து செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினி மட்டும் தனியாக அமெரிக்கா புறப்பட்டார்;13 பேரை உடன் அழைத்து செல்ல அனுமதி மறுப்பா

ரஜினிகாந்துக்கு கடந்த 2016ம் ஆண்டில் இந்த மயோ கிளினிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்த சிகிச்சைக்கு பின்னர் 2019ம் ஆண்டு உடல் பரிசோதனை செய்து கொள்ள மயோ கிளினிக் அறிவுறுத்தி இருந்தது. அரசியல் கட்சியால் அந்த ஆண்டு அமெரிக்க பயணத்தை தள்ளிப்போட்டார் ரஜினிகாந்த். கொரோனாவினால் கடந்த ஆண்டு பயணம் தடைபட்டது.

ரஜினி மட்டும் தனியாக அமெரிக்கா புறப்பட்டார்;13 பேரை உடன் அழைத்து செல்ல அனுமதி மறுப்பா

இந்நிலையில், இன்று சிறப்பு விமானத்தில் செல்ல அனுமதி பெற்று அமெரிக்கா புறப்பட்டுள்ளார். ரஜினியுடன் 13 பேர் உடன் செல்வதாக சொல்லப்பட்டிந்த நிலையில், அவர் மட்டுமே தனியாக செல்கிறார்.

ரஜினி மட்டும் தனியாக அமெரிக்கா புறப்பட்டார்;13 பேரை உடன் அழைத்து செல்ல அனுமதி மறுப்பா

சிறப்பு விமானத்தில் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தபோது, தன்னுடன் 13 செல்லும் பட்டியலை 2 மத்திய அமைச்சர்களுக்கு அனுப்பி வைத்திருந்ததில், அவர்கள் அதற்கு அனுமதி அளித்ததாகவும், ஆனால், ரஜினிகாந்த் சரி, அவருடன் வரும் அந்த 13 பேரும் அவ்வளவு முக்கியமா என்று கேட்டு அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இன்று அவர் தனியாக சிறப்பு விமானத்தில் சென்றிருக்கிறார். அதே நேரம் ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மட்டும் உடன் சென்றார் என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு ரஜினியுடன் லதா காரில் வந்திறங்கும் வீடியோவினையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ரஜினி மட்டும் தனியாக அமெரிக்கா புறப்பட்டார்;13 பேரை உடன் அழைத்து செல்ல அனுமதி மறுப்பா

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ், பேரன்கள் அமெரிக்காவில் உள்ளதால் ரஜினி சென்றதும் அவர்கள் ரஜினியுடன் இணைந்துகொள்கின்றர்.

உடல் பரிசோதனைகள் முடிந்து மூன்று வாரங்களுக்கு பின்னர் சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்.