புத்திரக்கவுண்டம் பாளையத்தில் 1,200 காளைகள் பங்கேற்ற பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு!

 

புத்திரக்கவுண்டம் பாளையத்தில் 1,200 காளைகள் பங்கேற்ற பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு!

சேலம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரக்கவுண்டம்பாளையம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்து 200 காளைகள் பங்கேற்றன.

சேலம் மாவட்டம் வழப்பாடி அடுத்த புத்திரக்கவுண்டம் பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், புதுகோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரத்து 200 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்திருந்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, இளைஞர்கள் திமிலைப் பிடித்து அடக்க முயன்றனர். மேலும், சில காளைகள் அடக்க முயன்றவர்களை அச்சுறுத்திய படி மிரட்டிச் சென்றன.

புத்திரக்கவுண்டம் பாளையத்தில் 1,200 காளைகள் பங்கேற்ற பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு!

5 பிரிவுகளாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்கள் மற்றும் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள், பிரிட்ஜ், கட்டில், வெள்ளிப்பாத்திரங்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் சேலம் ஆட்சியர் ராமன், எஸ்.பி., தீபா கணிகர் மற்றும் சேலம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.