தருமபுரி சோகத்தூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு… காளைகள் முட்டியதில் 5 பேர் காயம்…

 

தருமபுரி சோகத்தூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு… காளைகள் முட்டியதில் 5 பேர் காயம்…

தருமபுரி

தருமபுரி அடுத்த சோகத்தூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 500-க்கும் மேற்பட்ட காளைகளும், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீர்ர்களும் கலந்துகொண்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் அழிந்துவரும் ஆலம்பாடி இன மாடுகளை பாதுகாக்க, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, தருமபுரியை அடுத்த சோகத்தூர் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில், தருமபுரி மட்டுமின்றி மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அதேபோல் காளைகளை அடக்க 250-க்கும் மேற்பட்ட வீரர்களும் களமிறங்கினர். போட்டியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தருமபுரி சோகத்தூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு… காளைகள் முட்டியதில் 5 பேர் காயம்…

அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து திறக்கப்பட்ட காளைகளை திமிலை பிடித்து அடக்க இளைஞர்கள் முயற்சித்தனர். சில காளைகள் பிடிபட்டும், சில காளைகள் இளைஞர்களை அச்சுறுத்தியும் சீறிப்பாய்ந்து சென்றன. 5 சுற்றுகளாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் வென்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரெக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகிற்னர். காளைகள் முட்டியதில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.