மு.க.அழகிரி மகனின் ரூ.40 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி!

 

மு.க.அழகிரி மகனின் ரூ.40 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி!

மதுரை கீழவளவில் கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சென்னை: மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

durai dhayanidhi

மதுரை கீழவளவில் கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சட்டத்துக்கு புறம்பாக வரம்பு மீறி துரை தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் குவாரியில் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக மதுரை மேலூரைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2012-ஆம் ஆண்டில் துறை தயாநிதி மற்றும் அவரது நண்பர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

enforcement directorate

இதையடுத்து, ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின்  உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்தது. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு சொந்தமான மதுரை மற்றும் சென்னையில் உள்ள ரூ.40 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் வாசிங்க

தினகரன் பொதுச்செயலாளரானது சசிகலாவின் ஒப்புதலுடன் நடக்கவில்லை’…இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா பகீர்…