• November
    12
    Tuesday

Main Area

Main



’தினகரன் பொதுச்செயலாளரானது சசிகலாவின் ஒப்புதலுடன் நடக்கவில்லை’...இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா பகீர்...

கிருஷ்ணபிரியா
கிருஷ்ணபிரியா

அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் பதவியேற்றுக்கொண்டது சசிகலாவின் ஒப்புதலுடன் நடந்ததாக தினகரன் சொல்லுவது நம்பும்படியாக இல்லை’ என்று   இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா  கூறியுள்ளார்.

ttv

அ.ம.மு.க.வை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்த தினகரன் தன்னைப் பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு கட்சியில் நடக்கும் அத்தனை காரியங்களுக்கு சசிகலாவின் ஒப்புதல் பெறப்படுகிறது என்றும் கூறியிருந்தார். டி.டி.வியின் அந்தக் கருத்தை மறுக்கும் இளவரசி ‘தினகரன் எடுக்கும் எல்லா முடிவுகளுமே முன்கூட்டியே அவரால் திட்டமிட்டு நடத்தப்படும் கேலிக்கூத்துக்கள்’என்கிறார்.

krishnapariya

ஒரு வார இதழுக்கு மினி பேட்டி அளித்த அவர்,’என் அத்தை சொன்னார் என்கிற ஒரே காரணத்துக்காக தங்கள் பதவிகளைத் துறந்து தினகரனுக்குப் பின்னால் நின்றவர்களுக்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்கிறார்.இதன் மூலம் எந்தக் காலத்திலும் அ.தி.மு.க.வைக் கைப்பற்ற முடியாது என்ற சட்ட ரீதியான தோல்வியை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ttv

கட்சியில் நடக்கும் அத்தனை காரியங்களும் அத்தையின் ஒப்புதலுடன் தான் நடக்கிறது என்று தினகரன் சொல்வது நம்பும்படி இல்லை.எங்கள் குடும்பத்தினரை அ.ம.மு.க.வில் இருந்து தினகரன் ஓரம்கட்ட முடியுமே ஒழிய அரசியலில் இருந்து ஓரம் கட்ட முடியாது.

sasikla

அ.ம.மு.க.வை கட்சியாகப் பதிவு செய்யாவிட்டால் பொதுச்சின்னம் கிடைக்காது என்கிற காரணத்தை விட சுயேச்சையாக நிற்கிற வேட்பாளர்களில் ஜெயிக்கிற யாராவது வேறு கட்சிக்குத் தாவிவிடுவார்களோ என்கிற பயத்தில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் தினகரன்’ என்கிறார் கிருஷ்ணபிரியா  .

இதையும் வாசிக்க: 4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல்; அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

2018 TopTamilNews. All rights reserved.