மிஸ்டர் லோக்கல்னு பார்த்தா…இவ்வளவு லோக்கலாவா இருப்பீங்க சிவகார்த்திகேயன்!?

 

மிஸ்டர் லோக்கல்னு பார்த்தா…இவ்வளவு லோக்கலாவா இருப்பீங்க சிவகார்த்திகேயன்!?

நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்யபிரதா சாஹூ  தெரிவித்துள்ளார். 

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனை பெயர் இல்லாமல் வாக்களிக்க அனுமதித்த, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்யபிரதா சாஹூ  தெரிவித்துள்ளார். 

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் கடந்த 18 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், ரமேஷ் கண்ணா ஆகியோரின், பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை எனக் கூறி, திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை காட்டி தனது வாக்கை செலுத்தினார்.

இதேபோல், ஸ்ரீகாந்த் அடையாள அட்டையில், முகவரி மாற்றம் செய்திருந்ததால் அவர் ஓட்டுப்போட முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் அதிகாரி ஒருவர் அவரிடம், ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வாக்களிக்க அனுமதித்ததாக வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 

நடிகர்களுக்கு மட்டும் இது போன்ற சலுகைகளை கொடுத்து வாக்களிக்க வைப்பீர்களா? சாமானிய மக்கள் என்றால் விரட்டுவீர்களா என்று அங்கு கூடியிருந்த மக்கள் கேள்வி எழுப்பினர். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சிவகார்த்திகேயன் வாக்களித்ததை விசாரித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹூ,வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அதே போன்று நடிகர் ஸ்ரீகாந்திற்கு மை மட்டுமே வைக்கப்பட்டது எனவும் அவர் ஓட்டு போடவில்லை எனவும்  சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

srikanth

ஆனால் ஸ்ரீ காந்த் தான் ஓட்டு போட்டு விட்டதாக கூறினார். இருப்பினும் சத்ய பிராதா சாஹூ இதுபோன்று கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: #Thalapathy63: ரகசியம் உடைத்த தேவதர்ஷினி?!..