• April
    03
    Friday

Main Area

Main



#Thalapathy63: ரகசியம் உடைத்த தேவதர்ஷினி?!..

தேவதர்ஷினி குடும்பம்
தேவதர்ஷினி குடும்பம்

சென்னை: தளபதி 63 படத்தில் தனது கதாபாத்திரம் பற்றிய ரகசியத்தை பற்றி பேட்டியளித்துள்ளார் தேவதர்ஷினி.

தெறி, மெர்சல் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யும் அட்லீயும் இணைந்துள்ள படம் ‘தளபதி 63’. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெரோப், இந்துஜா, யோகி பாபு, விவேக் மற்றும் டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எடிட்டிங் பணிகளை ரூபன் மேற்கொள்கிறார்.

deva

சமீபத்தில் 96, காஞ்சனா 3 படங்களில் கலக்கிய தேவதர்ஷினி, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த தேவதர்ஷினி, தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்துள்ளார்.

dd

தேவதர்ஷினி இந்த படத்தில் விஜய்யின் அக்காவாக நடிக்கிறார். இதுகுறித்து அவர், அட்லீ முதன்முதலாக விஜய்யின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு என் மகள் நியதியை நடிக்க வைக்க முயற்சித்தார். அவளுக்கு தேர்வு என்பதால், தங்கை கதாபாத்திரத்துக்கு பதிலாக அக்கா கதாபாத்திரத்தை உருவாக்கி எனக்கு வாய்ப்பளித்தார் என்றார்.

dd

மேலும் அவர், விஜய் உடன் பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சி. படப்பிடிப்பு தளத்தில் என்னை அக்கா என்று அன்புடன் அழைக்கிறார், எனக்கு பெருமையாக இருக்கிறது. நானும் விஜய்யும் நடித்துள்ள போர்சன்கள் காமெடியாக அமைந்துள்ளது. விஜய்யின் மாஸ் இன்னும் குறையாமல் இருப்பது அவர் பெற்ற வரம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: படுக்கைக்கு அழைத்ததால் திரையுலகில் இருந்து விலகினேன்! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!

2018 TopTamilNews. All rights reserved.