தேர்தலில் போட்டியிடும் முதல்வர் மகள்: இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் வாக்குச்சீட்டு முறை? அதிர்ச்சி ரிப்போர்ட்!

 

தேர்தலில் போட்டியிடும் முதல்வர் மகள்: இந்த ஒரு தொகுதிக்கு மட்டும்  வாக்குச்சீட்டு முறை? அதிர்ச்சி ரிப்போர்ட்!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் போட்டியிடும் தொகுதியில் வாக்கு சீட்டு முறை நடைமுறைப்படுத்தவுள்ளது. 

தெலுங்கானா: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் போட்டியிடும் தொகுதியில் வாக்கு சீட்டு முறை நடைமுறைப்படுத்தவுள்ளது. 

மக்களவை தேர்தல்

vote

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதனிடையே தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் லோக்சபா தொகுதியில் தற்போது ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிடுகிறார். அதே தொகுதியில், பாஜக சார்பில் அரவிந்த், காங்கிரஸ் சார்பில் மதுயாஷ்கி கவுடா ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

வாக்குச்சீட்டு முறை

ballot

இந்நிலையில், தேர்தலில் வாக்குப் பதிவுக்காக, வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுவது சமீபகாலமாக வழக்கத்தில் உள்ளது. ஆனால் நிஜாமாபாத் தொகுதியில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வாக்குச்சீட்டு முறை பயன்பாடு ஏன்?

chandrasekar

ஏன்  இந்த தொகுதிக்கு மட்டும் வாக்குச்சீட்டு முறை என்ற கேள்விக்கு அங்குள்ள விவசாயிகள்  தான் பதிலாக அமைந்துள்ளனர். ஆம்  நிஜாமாபாத் தொகுதியில் மஞ்சள் மற்றும் சிவப்பு சோளம் அதிகளவில் விளைகிறது. மஞ்சள் கொள்முதலுக்கு தனிவாரியம் அமைக்க வேண்டும், சிவப்பு சோளத்திற்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள்  கோரிக்கை விட்து  வந்துள்ளனர்.ஆனால்  சந்திரசேகர ராவின் அரசோ அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் கோபமடைந்த விவசாயிகள், நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிடும் டிஆர்எஸ் கட்சி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட விவசாயிகள் முடிவு செய்தனர். 

 மொத்தம் 185 வேட்பாளர்கள்

kavitha

இதற்காக முதல்வர் சந்திரகேகர ராவின் மகள் கவிதாவை எதிர்த்து 200 விவசாயிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அதில் 178 விவசாயிகளின் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில்   மொத்தம் 185 வேட்பாளர்கள் அந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

வேறு வழியின்றி  தவிக்கும் தேர்தல் ஆணையம் 

ec

பொதுவாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகபட்சமாக 64 சின்னங்களுக்குத் தான் இடம் ஒதுக்கமுடியும்.ஆனால்  இந்த தொகுதியில், 185 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வேறு வழியின்றி  தேர்தல் ஆணையம் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்தவுள்ளது. 

இதையும் வாசிக்க: ஷு பாலிஷ், இளநீர் விற்பனை: மன்சூர் அலிகானின் நூதன பிரசாரம்!