• April
    07
    Tuesday

Main Area

Main



ஷு பாலிஷ், இளநீர் விற்பனை: மன்சூர் அலிகானின் நூதன பிரசாரம்!

நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான்

திண்டுக்கல்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும்  நடிகர் மன்சூர் அலிகான்  நூதன முறையில் வாக்கு சேகரித்து வியப்பில் ஆழ்த்தினார். 

நாம் தமிழர் வேட்பாளர் மன்சூர் அலிகான் 
mansoor

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில்,  திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதற்காகச் சமீபத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த  மன்சூர் அலிகான் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் வாக்காளர்களைக் கவர, நூதன முறைகளைக் கையாண்டு வருகிறார். 


நூதன முறையில் பிரசாரம் 
mansoor

சாலையில் இறங்கி குப்பைகளைச் சுத்தம் செய்வது, ஷு பாலிஷ் போடுவது, இளநீர் கடையில் இளநீர் வெட்டி கொடுப்பது எனத் தன்னை வேட்பாளராக இல்லாமல் மக்களுக்காக உழைக்கும் ஒரு சாமானிய மனிதனாகக் காட்டிக் கொண்டுள்ளார். 

மாட்டு கொட்டகையில்  வாக்கு சேகரிப்பு 
mansoor

இந்நிலையில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு சென்ற  நடிகர் மன்சூர் அலிகான் அங்குள்ள மாட்டு கொட்டகையில் அமர்ந்து மக்களிடம் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார். அதே போல், அங்குள்ள மக்கள் கொடுக்கும் குளிர்பானங்களை அருந்தி தன்னை ஒரு எளிய வேட்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 

முன்னதாக மன்சூர் அலிகானிடம் உங்கள் அரசியல் வியூகம் என்ன என்று கேட்டதற்கு, 'நாங்க கணக்கு போட்டு பார்குறதுலாம் இல்லை. நெத்தியடி கொல குத்து பாம்ப அடிச்சா தலையில தான் அடிப்போம். எந்த பணக்காரனுக்காகவும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. மக்களை பணக்காரர்களாக மாற்றத்தான் நாங்கள் ஆட்சிக்கு வருகிறோம்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க : #DuraiMurugan நெருங்கி வரும் தேர்தல்: துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை: மத்திய மாநில அரசுகளின் சதியா?

2018 TopTamilNews. All rights reserved.