அஜித்,விஜய்யை பின்னுக்கு தள்ளிய அவென்சர்ஸ்!

 

அஜித்,விஜய்யை பின்னுக்கு தள்ளிய அவென்சர்ஸ்!

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனையில் களைகட்டியது. 

சென்னை: அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனையில் களைகட்டியது. 

ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் படமான ‘அவெஞ்சர்ஸ் சீரிஸ்’ உலகம் முழுவதும் பிரபலமானது. அப்படத்தின் 4-ம் பாகமான அவென்சர்ஸ் எண்ட் கேம் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது. தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 

AVENGERS END GAME

இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு நேற்று நள்ளிரவு 12 அளவில் தொடங்கப்பட்டது. முன்பதிவு ஆரம்பமான சில மணி நேரத்திலியே அணைத்து டிக்கெட்டுகளும் விற்றுப்போனது. அதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் 90% டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. 

avengers end game

மேலும் இதுபோன்று முன்பதிவு தொடங்கி சில மணி நேரங்களில் டிக்கெட் விற்றுப்போவது டாப் ஹீரோவான அஜித், விஜய் படத்திற்கு மட்டுமே வழக்கமாக நடைபெற்று வருகிறது. ஆனால் முதல் முறையாக அதை பின்னுக்கு தள்ளி அவென்சர்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது. இப்படியே சென்றால் சமீபத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம் படத்தின் வசூலை அவென்சர்ஸ் முறியடித்துவிடும் என்று எதிர்பாக்கப்படுகிறது. 

avengers

மேலும் சில மணி நேரத்தில் டிக்கெட் விற்றுப் போனதால், ஏமாற்றம் அடைந்த அவென்சர்ஸ் ரசிகர்கள் திரையரங்குகளில் காட்சியை அதிகப்படுத்துமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: மக்கள் செல்வனுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த கமலின் மகள்!