• November
    12
    Tuesday

Main Area

Main



மக்கள் செல்வனுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த கமலின் மகள்! 

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

சென்னை: முதல் முறையாக நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார். 

தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வரும் ஹீரோ என்றால் அது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மட்டுமே. இவரது நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. அதையடுத்து இவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

vijay sethupathi

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி ஈ, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் படத்தில் கமிட் ஆகியுள்ளார். லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இதில் ஸ்ருதி பாடகி மற்றும் டான்ஸர் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

விவசாயிகள் பிரச்சனை குறித்து உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு அம்பாசமுத்திரத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தைப் பற்றிய மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பாலா படத்தில் ஹீரோயினாகும் பிக் பாஸ் பிரபலம்!
 

2018 TopTamilNews. All rights reserved.