பிக் பாஸ் வீட்டைச் சுற்றி குவியும் போலீஸ்…யார் கண்டது கமல் கூட கைதாகலாம்?…

பிக் பாஸ் வீட்டைச் சுற்றி குவியும் போலீஸ்…யார் கண்டது கமல் கூட கைதாகலாம்?…

பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியை எப்படியாவது ஹிட் அடித்துவிட வேண்டும் என்கிற ரேட்டிங் வேட்டையில் பழைய குற்றவாளிகள் சிலரை நிகழ்ச்சியில் இறக்கியுள்ள விஜய் டி.வி. தற்போது அவர் கைதாகலாம் இவர் கைதாகலாம் என்று பார்வையாளர்களையின் பி.பியை ஏற்றிவரும் நிலையில், தேவைப்பட்டால் கமலையே கைது செய்யவும் ஏற்பாடு செய்யக்கூடும் என்று நெட்டிசன்கள் நக்கலடித்து வருகிறார்கள்.

kamal

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள 16 குடும்ப அங்கத்தினர்களில் வனிதா விஜயகுமார், மீரா மிதுன் ஆகியோர் மீது பல வழக்குகள் உள்ள சங்கதி தெரிந்தேதான் விஜய் டிவி நிர்வாகம் அவர்களைத் தேர்வு செய்தது. ஏனெனில் இந்தி மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் அவர்கள் எதிர்பாராமல் நடந்த ஒன்றிரண்டு கைது சம்பவங்கள் அந்நிகழ்ச்சியின் ரேட்டிங்கை தாறுமாறாக ஏற்றின.

meera and vanitha

அந்த சம்பவம் தமிழில் நடக்கவேண்டுமென்பதற்காகவே மிக சமீபத்தில் கமிஷனர் அலுவலகத்து பலமுறை அழகிகள் மோசடி வழக்குக்காகப் போய் வந்த மீரா மிதுனையும், சொந்த தந்தையின் மீதே தொடர்ந்து போலீஸ் புகார் கொடுத்து வரும் வனிதா விஜயகுமாரையும் நிகழ்ச்சியில் சேர்த்தது. அந்தத் திட்டப்படி மீரா மிதுனின் அம்மா காவல் நிலையத்துக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார். கடந்த பிப்ரவரில் தனது குழந்தையை ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த வழக்கில் ஆந்திர போலீஸ் பிக் பாஸ் இல்லத்தை முற்றுகையிட்டிருப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

cheran and mohan

போகிற போக்கில் லாஸ்லியா கல்லூரியில் படித்தபோது லவ் லெட்டர் கொடுத்த ஒரு மாணவனை அறைந்த வழக்கு, பெரியவர் மோகன் வைத்யா ஒரு கச்சேரியில் மிக்‌ஷர் சாப்பிட்டுக்கொண்டே பாடியது, சேரன் ‘ஆட்டோகிராஃப்’படத்தில் ஒரு துணை நடிகையைக் கெட்ட வார்த்தையில் திட்டியது போன்ற வழக்குகளும் தூசி தட்டப்படலாம். இவ்வளவும் ஒர்க் அவுட் ஆகாவிட்டால் இருக்கவே இருக்கிறார் பிக்பாஸ் கமல். தொடர்ந்து புரியாமல் ட்விட் போடுகிறார் என்கிற ஒரு செக்‌ஷன் போதாதா, அவர் மீது வழக்குப்போட? செய்ங்க பாஸ்…செய்ங்க..