‘எல்லாரையும் காலி பண்ண போறேன்’: மாஸ்டர் பிளான் போட்ட கவின் 

 

‘எல்லாரையும் காலி பண்ண போறேன்’: மாஸ்டர் பிளான் போட்ட கவின் 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி 64 நாட்களை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து இதுவரை பாத்திமா பாபு,வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன்,மதுமிதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் போட்டியாளர்களை தனித்தனியாக அழைத்து ஒன்றாக இருந்த நண்பர்களைப் பிரித்துவிடுவது போல் அறிவுரை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக இன்று கவினை, முகின் மற்றும் தர்ஷன் நாமினேட் செய்தனர். 

தற்போது இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் சாண்டி, தர்ஷன், முகின் ஒரு அணியாக இருந்து கொண்டு கவினை எதிர்மறையாகக் கேள்வி கேட்பது போல் தெரிகிறது. அந்த புரோமோவில் சாண்டி,’ ஏன் நீங்களும் எனக்கு வேணும்’னு ஆசை படலாமே? என்று கேட்க. 

உடனே கவின், ‘ஆமா நான் ரெடி. அதுனாலதா game on சட்டை போட்டுக்கிட்டு இருக்கேன். முதல ஆளாக வந்த போதே உங்களுக்கு தெரிந்து இருக்கணும், உங்க எல்லாரையும் அடிச்சிட்டு நான் முன்னாடி போக போறேன்னு. உங்க எல்லாரையும் செய்யாரான இல்லையா பாருங்க. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? முதலில் உங்களை காலி செய்துவிட்டு அவங்க கிட்ட போக போறேன்’ என்று பேசுவது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.