‘என்ன இனிமே நீ பார்க்க வேண்டாம்’ : கவினுக்கு கண்டிஷன் போட்ட லாஸ்லியா! 

 

‘என்ன இனிமே நீ பார்க்க வேண்டாம்’ : கவினுக்கு கண்டிஷன் போட்ட லாஸ்லியா! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் வீட்டில் எந்த நேரமும் பெண்களுடன் சுற்றி கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்வது கவின் தான். மச்சான்.. மச்சான்… என்று பேசிக்கொண்டு எப்போதும் லாஸ்லியா, சாக்ஷி, அபிராமியோடு பொழுதைக் ஜாலியாக கழித்து வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் சக  போட்டியாளர்கள் மனதிலும் இடம் பிடித்த கவின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவை இழந்து வருகிறார். 

ஒரே நேரத்தில் லாஸ்லியா மற்றும் சாக்ஷி மீதும் கவினுக்கு ஒரு கண் இருப்பதால் மக்கள் அவரை சரமாரியாகக் கேள்வி கேட்டு வருகின்றனர். கவின் ஒரு பிளேபாய் என்பதை புரிந்து கொண்ட லாஸ்லியா, கவினை ‘அண்ணா’ என்று கூப்பிட்டு வெறுப்பேற்றி வருகிறார். 

இந்த நிலையில் இன்றைக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் எப்பவும் போல் லாஸ்லியா, கவின் நெருங்கி வருவதைத் தெரிந்து கொண்டு அவருக்கு இன்று ஒரு டாஸ்க் கொடுக்கின்றார். அது என்னவென்றால் ‘இன்று முழுவதும் நீ என்னைப் பார்க்கவே கூடாது. நானே பார்த்தாலும் நீ பார்க்ககூடாது’ என்று கண்டிஷன் போடுகிறார்.இந்த கண்டிஷனை கண்டு அதிர்ச்சி அடைந்த கவின், ‘நாள் முழுக்க உன்னைப் பார்க்கச் சொன்ன கூட பார்க்குறேன். என்னால பார்க்காம இருக்க முடியாது’ என்று கூறுகிறார். இந்த டாஸ்கை கவின் ஏற்பாரா இல்லை தட்டிக் கழிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.