‘அத்தை நீ செத்த’: ரோஷாமாவிற்கு ஆப்படித்த முகன் ராவ்! 

 

‘அத்தை நீ செத்த’: ரோஷாமாவிற்கு ஆப்படித்த முகன் ராவ்! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.  

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.  

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்று மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து மீரா வெளியேறினார். அதைதொர்ந்து வார முதல் நாளான இன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம். இந்த நாமினேஷன் ரகசியமாக நடைபெறுவதால் யார் யாரை நாமினேஷன் செய்கிறார்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியாது. பல சமயம் நண்பர்களே கூட நாமினேஷன் செய்ததுண்டு. 

இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் முதல் முறையாக ஒப்பன நாமினேஷன் நடைபெறுகிறது. அதில் லாஸ்லியா மற்றும் சாக்ஷி நாமினேஷன் செய்ததை ஏற்கனவே பார்த்துத்திருந்தோம். தற்போது அவர்களை தொடர்ந்து மற்ற ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்யும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

அதில், பிக் பாஸ் வீட்டின் ஹேண்ட்சம் ஹீரோஸ் முகன் மற்றும் தர்ஷன், ரோஷாமாவை நாமினேட் செய்துள்ளனர். காரணம் கூறுகையில், ‘நீயூட்ரலாக இருக்கிறேன் என்ற பெயரில் இரண்டு பக்கமும் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்’ என்று தர்ஷன் காரணம் கூறினார். 

அவரை தொடர்ந்து பேசிய முகன் ராவ், ‘அத்தை நீ செத்த’… சில இடத்துல அவங்க பேசுறது தப்ப போகுதோ’னு எனக்கு தோணுச்சு’ என்றார். அவரை தொடர்ந்து ரேஷ்மா, சேரனை நாமினேட் செய்ய ஷெரின், முதல் முறையாக லாஸ்லியவை நாமினேட் செய்துள்ளார்.