வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பழனி பஞ்சாமிர்த டப்பாக்கள்!

 

வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பழனி பஞ்சாமிர்த டப்பாக்கள்!

பழனி முருகன் கோவிலில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன

திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ள தேர்தல் ஆணையம் அதனை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களிடம் ஓட்டு போடும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளையும், பிரசாரங்களையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது.

election commission

கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், வீடியோக்கள் போன்றவற்றை அதிகமாக வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய தேர்தல் ஆணையம் இம்முறை பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளது. வாக்காளர்கள் ஓட்டு போடும் அவசியத்தை வற்புறுத்தும் வகையில் ரஜினிகாந்த உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வேண்டுகோள் விடுக்கும் விழிப்புணர்வு வாசகங்களையும் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

palani murugan

இந்நிலையில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பழனி முருகன் கோயிலில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.