கனிமொழி ‘பார்லிமெண்ட் டைகர்’ : தங்கையை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்

 

கனிமொழி ‘பார்லிமெண்ட் டைகர்’ : தங்கையை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்

தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு சேகரித்த ஸ்டாலின், ‘பார்லிமெண்ட் டைகர்’ என்று புகழ்ந்து பேசியுள்ளார். 

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு சேகரித்த ஸ்டாலின், பார்லிமெண்ட் டைகர் என்று புகழ்ந்து பேசியுள்ளார். 

கனிமொழி vs தமிழிசை 

kanitamil

நாடாளுமன்றத் தேர்தலில்  திமுக சார்பில்,  தூத்துக்குடி மாவட்டத்தில் களமிறங்கியுள்ள, கனிமொழியை எதிர்த்து, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டுள்ளார்.  கனிமொழியை பொறுத்தவரையில், தூத்துக்குடி மாவட்டத்தில் களப்பணி ஆற்றி வருகிறார் அதனால் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று திமுகவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே சமயம் தமிழிசைக்கோ ஒருபக்கம் அதிமுக கூட்டணி, தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர் போன்ற பலமான காரணிகள் முன் இருந்தாலும், மற்றொரு பக்கம், வலிமையான எதிர் வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கஜா புயல், பாஜக மீதான அதிருப்தி போன்றவை அவரது தலைக்கு மேல் கத்தி போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழிசையை எப்படியாவது வெற்றி பெற வைக்க பாஜகவினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நானே போட்டியிடுவதற்குச் சமம் 

kanimozhi stalin

இந்த நிலையில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து முக.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்,  ‘உதயசூரியன் சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் அவர்கள் கலைஞருடைய பிள்ளைகள்தான் என்று கூறியுள்ளேன். ஆனால்  கலைஞரின் பிள்ளையே இங்கு போட்டியிடுகிறார். அவர் போட்டியிடுவது கலைஞர் போட்டியிடுவதைப் போன்றது. ஏன் நானே போட்டியிடுவதற்குச் சமம். அதை கருத்தில் கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டும்’ என்றார். 

பார்லிமெண்ட் டைகர்

kanimozhi

கனிமொழி பன்முக தன்மை கொண்டவர். சமூக போராளியாக வலம் வருகிறார். திமுகவின் மகளிர் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். 2007ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் வாதாடி வெற்றிகண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவர்  பார்லிமெண்ட் டைகர் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார்.  பாஜக வேட்பாளரான தமிழிசை, தோல்வியடைவதற்காகவே களமிறக்கப்பட்டுள்ளார்’ என்று உணர்ச்சி பொங்க பேசினார். கனிமொழி குறித்த முக ஸ்டாலினின் இந்த பேச்சு திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை எழுப்பியது. 

இதையும் வாசிக்க:  நடிகர்கள் சண்டையில் லாபம் பார்க்கும் லேடி சூப்பர் ஸ்டார்! இத்தனை கோடி சம்பளமா?