மேற்கு வங்கத்தில் சீனாவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்… டி-சர்ட்டை கழட்டி எரித்த சோமாட்டோ ஊழியர்கள்!

மேற்கு வங்கத்தில் சீனாவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்… டி-சர்ட்டை கழட்டி எரித்த சோமாட்டோ ஊழியர்கள்!

முழு நாடும் சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் மக்களின் கோபம் போராட்டமாக வெடிக்கத் துவக்கியுள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தெருக்களில் காணப்படுகிறார்கள்.

இந்திய நிறுவனங்களில் சீன நாட்டின் முதலீடு செய்து லாபம் ஈட்டி வருவதாக கருதிய சோமாடோ ஊழியர்கள் தங்கள் பணியில் இருந்து விலகியுள்ளனர். மேலும் மக்களுடன் போராட்டத்தில் இணைந்த சோமட்டோ ஊழியர்கள் தாங்கள் அணிந்திருந்த டிசர்ட்டுகளையும் கழற்றி எரித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் சீனாவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்… டி-சர்ட்டை கழட்டி எரித்த சோமாட்டோ ஊழியர்கள்!

கொல்கத்தாவின் தெற்கு பர்கானாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் ஜொமாட்டோவைச் சேர்ந்த 150 டெலிவரி பாய்கள் வேலையை ராஜினாமா செய்ததாகக் கூறியுள்ளனர். ஆனால் இங்கு போராட்டத்தில் சிலர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். எங்கள் வீரர்களைக் கொன்ற நாட்டின் நிறுவனங்களுடன் பணிபுரியும் எந்தவொரு நிறுவனத்துடனும் நாங்கள் பணியாற்ற விரும்பவில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனம் அலிபாபாவின் துணை நிறுவனமான ஆண்ட் பைனான்சியல் ஜனவரி மாதம் சோமாடோவில் சுமார் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் ஜோமாட்டோ ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்ததுடன் சீருடையையும் எரித்துள்ளனர்.