ஹைதராபாத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வரின் சகோதரி.. போலீஸ் காவலில் வைப்பு

ஹைதராபாத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வரின் சகோதரி.. போலீஸ் காவலில் வைப்பு

ஹைதராபாத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்தனர்.

தெலங்கானாவில் அரசாங்க வேலைவாய்ப்புகளை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட அம்மாநில அரசு தவறியதால் 28 வயதான பி சுனில் நாயக் என்ற இளைஞர் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த வாரம் சுனில் நாயக் தற்கொலை செய்து கொண்டார். இது தெலங்கானாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஹைதராபாத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வரின் சகோதரி.. போலீஸ் காவலில் வைப்பு
ஒய்.எஸ்.சர்மிளா

இந்நிலையில் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஓய்.எஸ்.சர்மிளா, தெலங்கானா அரசு வேலைவாய்ப்புகள் குறித்து அறிவிக்கை வெளியிடக்கோரி நேற்று ஹைதராபாத்தில் தர்ணா சதுக்கத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இதில் அவரது தாயார் ஓய்.எஸ். விஜயம்மாவும் கலந்து கொண்டார். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

ஹைதராபாத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வரின் சகோதரி.. போலீஸ் காவலில் வைப்பு
ஒய்.எஸ்.சர்மிளா

இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி உண்ணாவிரத்தில் ஈடுபட முயற்சி செய்ததால், ஓய்.எஸ்.சர்மிளா, பேகம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டார். முன்னதாக 3 நாள் உண்ணாவிரத்தில் ஈடுபட காவல்துறையிடம் சர்மிளா அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் ஒரு நாள் மட்டுமே போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கினர். ஓய்.எஸ்.சர்மிளா இது குறித்து கூறுகையில், தெலங்கானா அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிக்கையை சரியான நேரத்தில் வெளியிடாததால் சுனில் நாயக் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. குடும்பத்தின் ஒரு உறுப்பினர் தற்கொலை செய்து கொள்வது அவசியமா, அதனால் குடும்பத்தின் மற்ற உறுப்பினருக்கு வேலை கிடைக்கும்? என கேள்வி எழுப்பினார்.