இளைஞர் செல்வன் கொலை வழக்கு; கைதானவர்களுக்கு 6 நாட்கள் சிபிசிஐடி காவல்!

இளைஞர் செல்வன் கொலை வழக்கு; கைதானவர்களுக்கு 6 நாட்கள் சிபிசிஐடி காவல்!

சொக்கன் குடியிருப்பு இளைஞர் செல்வன் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு 6 நாட்கள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் செல்வன் கொலை வழக்கு; கைதானவர்களுக்கு 6 நாட்கள் சிபிசிஐடி காவல்!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே இருக்கும் சொக்கன் குடியிருப்பை சேர்ந்த செல்வன் என்ற இளைஞர் கடந்த 17ம் தேதி காரில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் திருமணவேல் மற்றும் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சிக்கினர். காவலர்கள் கைது செய்வதற்கு முன்னே திருமணவேல் காவல்நிலையத்தில் சரண் அடைந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இளைஞர் செல்வன் கொலை வழக்கு; கைதானவர்களுக்கு 6 நாட்கள் சிபிசிஐடி காவல்!

செல்வன் கொலை வழக்கில் தற்போது அதிமுக பிரமுகர் திருமண வேல், முத்துகிருஷ்ணன், சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகிய 4 பேர் சிறையில் இருக்கின்றனர். இந்த நிலையில், அவர்கள் 4 பேரையும் காவலில் எடுக்க

இளைஞர் செல்வன் கொலை வழக்கு; கைதானவர்களுக்கு 6 நாட்கள் சிபிசிஐடி காவல்!

சிபிசிஐடி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசன் உத்தரவிட்டார்.