டிராக்டரில் அமர்ந்து செல்ஃபி எடுத்த இளைஞர்… வாகனத்துடன் கிணற்றில் விழுந்து பலியான சோகம்…

 

டிராக்டரில் அமர்ந்து செல்ஃபி எடுத்த இளைஞர்… வாகனத்துடன் கிணற்றில் விழுந்து பலியான சோகம்…

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே டிராக்டரில் அமர்ந்து செல்பி எடுக்க முயன்ற இளைஞர், எதிர்பாராத விதமாக வாகனத்துடன் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சஞ்சீவி (19). கேட்டரிங் படித்து வந்த இவர், பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருந்து வந்தார். நேற்று மதியம் வீட்டின் அருகேயுள்ள விவசாய தோட்டத்திற்கு சென்ற சஞ்சீவி, அங்கு சவுந்தர் என்பவர் டிராக்டரில் நிலத்தை உழுததை பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்னர், மதிய உணவு சாப்பிட சவுந்தர் வாகனத்தை நிறுத்திவிட்டு, சாவியை எடுக்காமல் சென்று விட்டார். இதனையறிந்த, சஞ்சீவி டிராக்டரில் ஏறி செல்ஃபி எடுத்து, அதனை தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்தார். பின்னர், டிராக்டரை ஆன் செய்து ஓட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, கியரில் இருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 100 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்தது.

டிராக்டரில் அமர்ந்து செல்ஃபி எடுத்த இளைஞர்… வாகனத்துடன் கிணற்றில் விழுந்து பலியான சோகம்…

இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் வாணியம்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் சுமார் 35 அடிக்கும் மேலாக தண்ணீர் இருந்ததால் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். பின்னர், சுமார் 5 மணிநேர போராட்டத்துக்கு பின் கயிறு மூலம் சஞ்சீவியின் சடலத்தை மீட்டனர்.

தொடர்ந்து, கொலைன் இயந்திரம் மூலம் டிராக்டர் மீட்கப்பட்டது. அம்பலூர் போலீசார், சஞ்சீவியுன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.