மனைவியின் மகப்பேறு : இ-பாஸ் கிடைக்காததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

சென்னையை சேர்ந்த ரோஜா என்பவரை திருமணம் செய்துகொண்டு காஞ்சிபுரத்தில் வசித்து வந்துள்ளார்

காஞ்சிபுரம் மாவட்டம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையை சேர்ந்த ரோஜா என்பவரை திருமணம் செய்துகொண்டு காஞ்சிபுரத்தில் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து ரோஜா கர்ப்பமான நிலையில் மகப்பேறுக்காக சென்னை வந்துள்ளார். சென்னை வந்த ஓரிரு நாட்களுக்குள் குழந்தை பிறந்து விடும் வாய்ப்பு உள்ளதாக தொலைபேசியில் ரோஜா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் தனது கணவரை சென்னைக்கு வருமாறு ரோஜா அழைத்ததாக தெரிகிறது.

கொரோனா

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் விக்னேஸ்வரன் சென்னைக்கு செல்ல இ-பாஸ் பதிவு செய்து பலமுறை அனுமதி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் மனமுடைந்த விக்னேஸ்வரன் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது நண்பர் விக்னேஸ்வரனை சந்திக்க வீட்டிற்கு வந்தபோது அவர் தூக்கில் தொங்கியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு அவர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்...

அந்தமானில் திடீர் நிலநடுக்கம்!- அலறியடித்து ஓடிய மக்கள்

அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டை விட்டு மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம்...

உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

கொரொனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை. தேர்வுகளைக்கூட ரத்து செய்துவிட்டார்கள். ஆனாலும், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளைப் பள்ளியில்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது நேற்று...
Open

ttn

Close