மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் வசித்து வரும் இப்ராஹீம் என்பவரின் மகன் ரகுமான்(36). இவர் நேற்று இரவு காரில் விருது நகரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அருப்புக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், வளைவில் திரும்பும் போது அங்கிருந்து தடுப்பு சுவர் ஒன்றன் மீது வேகமாக மோதியுள்ளது.

இதில் காரின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்த நிலையில், காரை ஓட்டிச் சென்ற ரகுமான் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ரகுமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.