“பேஸ்புக்கில் பழகி திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர்”… ஈரோடு எஸ்.பி.யிடம் இளம்பெண் புகார்…

 

“பேஸ்புக்கில் பழகி திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர்”… ஈரோடு எஸ்.பி.யிடம் இளம்பெண் புகார்…

ஈரோடு

ஈரோட்டில் பேஸ்புக்கில் பழகிய தன்னை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை கோரி, இளம்பெண் எஸ்.பி-யிடம் புகார் அளித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சிங்கிரிபாளையம், வடக்கு வீதியை சேர்ந்த முத்துமாரி (22). இவர் நேற்று ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தனக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் தீனதயாளன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியதாகவும், தான் கேட்டுகொண்டதன் பேரில், தீனதயாளன் திருப்பூர் பெருமாநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தன்னை வேலைக்கு சேர்த்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அங்கு விடுதியில் தங்கியிருந்த தன்னை, திருமணம் செய்வதாக கூறி தனி வீட்டிற்கு அழைத்துச் சென்ற தீனதயாளன், கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாகவும் மேலும், கணவரிடம் பிரிந்து வாழும் தனது தங்கைக்கு திருமணமாகும் வரை காத்திருக்கும் படி தெரிவித்து, கடந்த 6 மாதங்களாக திருமணத்தை தட்டிக்கழித்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

“பேஸ்புக்கில் பழகி திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர்”… ஈரோடு எஸ்.பி.யிடம் இளம்பெண் புகார்…

இதனிடையே, தான் கர்ப்பமடைந்தும், தீனதயாளன் திருமணத்துக்கு மறுத்ததாதல் கோபி காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றதாகவும், அப்போது தீனதயாளனின் பெற்றோர் திருமணம் செய்து வைப்பதாக கூறி கருவை கலைக்க செய்ததாக தெரிவித்த முத்துமாரி, தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்து விட்டு திரும்ப சென்றபோது, தன்னுடன் தீனதயாளன் சேர்ந்து வாழமாட்டார் என்று விரட்டிவிட்டதாகவும் கூறினார்.

எனவே, தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய தீனதயாளன் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முத்துமாரி தனது மனுவில் கேட்டுகொண்டார்.