சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்யலாம்

 

சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்யலாம்

கேரள மாநிலத்தின் மிகப் பிரசித்தி பெற்ற கோவில் சபரிமலை ஐயப்பன் கோவில்.இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் ஆண்டு தோறும் ஐயப்பனுக்கு விரதமிருந்து இருமுடிக் கட்டுடன் இந்தக் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் முதல் ஐயப்ப சீசனுக்காக நடை திறக்கப்பட்டு மண்டல பூஜையும், மகரவிளக்கு பூஜையும்

சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்யலாம்

நடக்கவிருக்கிறது. இந்த சிறப்பு பூஜையில் ஐயப்பன் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்படும் எனக் கருதி கேரள அரசு அதிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்யலாம்

இதன்படி கேரளா வரும் ஐயப்ப பக்தர்கள் கொரோனா தாக்கம் இல்லை என சான்றிதழ் பெற்று வரவேண்டும். வேண்டும் முறையான ‘ஈ-பாஸ்’கள் வைத்திருக்க வேண்டும். மேலும் ஐயப்பன் கோவிலுக்கு வருபவர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். இல்லையெனில் ரூ 200 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.