மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிராக ஆயுதத்தை எடுக்கும் பா.ஜ.க… களமிறங்கும் யோகி ஆதித்யநாத்

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிராக ஆயுதத்தை எடுக்கும் பா.ஜ.க… களமிறங்கும் யோகி ஆதித்யநாத்

மேற்கு வங்கம் மால்டாவில் முதல் முறையாக அரசியல் பேரணியில் உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் உரையாற்ற உள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி தொடங்கி மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மிகவும் தீவிரமாக உள்ளது. அதேசமயம் ஆளும் கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிராக ஆயுதத்தை எடுக்கும் பா.ஜ.க… களமிறங்கும் யோகி ஆதித்யநாத்
பா.ஜ.க.

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கடந்த சில மாதங்களாக மாதந்தோறும் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அம்மாநிலத்தில் களம் இறக்குகிறது. யோகி ஆதித்யநாத்தின் அதிரடி பேச்சுக்கள் அவரை இந்து வாக்காளர்களை ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு பயர் பிராண்ட் இந்துத்துவா தலைவராக அவரது இமேஜ் உள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிராக ஆயுதத்தை எடுக்கும் பா.ஜ.க… களமிறங்கும் யோகி ஆதித்யநாத்
மம்தா பானர்ஜி, பா.ஜ.க.

இதனால் யோகி ஆதித்யநாத்தை மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. களம் இறக்குகிறது. கொல்கத்தாவின் வடக்கு பகுதியும், மம்தா பானர்ஜியின் கோட்டையான மால்டாவில் மார்ச் 2ம் தேதியன்று பா.ஜ.க. சார்பில் நடைபெறும் தேர்தல் பேரணியில் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். யோகி ஆதித்யநாத்தின் உரை நிச்சயம் மம்தா பானர்ஜிக்கு பெரும் சவால் விடுவதாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.