வாக்கு வங்கி அரசியல் செய்யும் இடதுசாரி, காங்கிரஸ்.. நீதிமன்றம் கூறியும் தைரியம் இல்லை.. யோகி ஆதித்யநாத்

 

வாக்கு வங்கி அரசியல் செய்யும் இடதுசாரி, காங்கிரஸ்.. நீதிமன்றம் கூறியும் தைரியம் இல்லை.. யோகி ஆதித்யநாத்

கேரளாவில் லவ்ஜிஹாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வரும்படி நீதிமன்றம் கூறியும், வாக்கு வங்கி அரசியல் செய்யும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் அரசாங்கங்கள் சட்டத்தை கொண்டு தைரியம் இல்லை என யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சனம் செய்தார்.

கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அங்கு பா.ஜ.க.வின் தேசிய தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பத்தனம்திட்டாவில் நடந்த பா.ஜ.க.வின தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:

வாக்கு வங்கி அரசியல் செய்யும் இடதுசாரி, காங்கிரஸ்.. நீதிமன்றம் கூறியும் தைரியம் இல்லை.. யோகி ஆதித்யநாத்
இடதுசாரி-காங்கிரஸ்

கேரள மக்கள் அவ்வப்போது இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அவர்கள் மக்களுக்கு துரோகம் மட்டுமே இழைத்துள்ளன. அந்த துரோகத்துக்கு வாக்கு மூலம் பதில் அளிக்க வேண்டிய நேரம் இது. தேசிய ஜனநாயக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ.) ஆகியவற்றின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன என்பதை நாம் மறக்க கூடாது.

வாக்கு வங்கி அரசியல் செய்யும் இடதுசாரி, காங்கிரஸ்.. நீதிமன்றம் கூறியும் தைரியம் இல்லை.. யோகி ஆதித்யநாத்
லவ் ஜிஹாத்

இது போன்ற சக்திகளுக்கான இடது ஜனநாயக முன்னணியின் மென்மையான அணுகல் கேரளாவின் பாதுகாப்புக்கும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை குறிக்கிறது. மாநிலத்தில் மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் வேறு மத பெண்களை காதலில் வீழ்த்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்யும் வழக்குகள் அதிகரித்ததையடுத்து லவ் ஜிஹாத்துக்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வரும்படி, 2009ல் கேரள உயர் நீதிமன்றம் மாநில அரசிடம் தெரிவித்தது. ஆனால் வாக்கு வங்கி அரசியல் செய்யும் இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கங்கள் லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டத்தை கொண்டு வர தைரியம் காட்டவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.