முதலில் தடை, பின் சம்மதம்… உ.பி.யில் துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த யோகி ஆதித்யநாத்

 

முதலில் தடை, பின் சம்மதம்… உ.பி.யில் துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த யோகி  ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் பந்தல்களில் துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு முதலில் அனுமதி மறுத்த யோகி ஆதித்யநாத் அரசு, தற்போது பந்தல்களில் துர்கா பூஜை கொண்டாட அனுமதி அளித்துள்ளது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த சில தினங்களுக்கு முன், கோவிட்-19 தொற்றுநோயை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் இந்த ஆண்டு துர்கா பூஜை கொண்டாடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. தெருக்களில் அல்லது பந்தல்களில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. மக்கள் தங்களது வீடுகளில் சிலைகளை வைத்து கொள்ளவேண்டும். ஊர்வலங்களுக்கு அனுமதி கிடையாது, கண்காட்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யக்கூடாது. அதேசமயம் கோவிட்-19ஆல் ராம்லீலா நடத்தும் பாரம்பரியம் உடைக்கப்படாது. இருப்பினும் ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே ராம்லீலாவை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்து இருந்தார்.

முதலில் தடை, பின் சம்மதம்… உ.பி.யில் துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த யோகி  ஆதித்யநாத்
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்த சூழ்நிலையில் தற்போது பந்தல்களில் துர்கா பூஜை கொண்டாட உத்தர பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், உத்தர பிரதேச அரசு துர்கா பூஜைக்கான கோவிட்-19 நெறிமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. துர்கா பூஜைகளை ஏற்பாடு செய்யும் குழுக்கள் பந்தல்களுக்குள் சமூக இடைவெளியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பந்தல்களை பார்க்க விரும்பும் மக்கள், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி மற்றும் சுத்திகரிப்பு உள்ளிட்ட கோவிட்-19 நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

முதலில் தடை, பின் சம்மதம்… உ.பி.யில் துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த யோகி  ஆதித்யநாத்
ராம் லீலா

மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அன்லாக் 5.0 வழிகாட்டுதல்களில், சமூக, கல்வி, விளையாட்டு, கலாச்சாரம்,மத, அரசியல் நிகழ்ச்சிகள் மற்றம் இதர கூட்டங்களை அதிகபட்சம் 100 நபர்களுடன் நடத்தி கொள்ள அனுமதி அளித்தது. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததையடுத்து துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு அனுமதி அளித்துள்ளது. இது துர்கா பூஜை கொண்டாட்டங்களை ஏற்பாடும் செய்யும் குழுக்களுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.