மோல்டாவில் இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் சுமார் 11 மணி நேரம் நடத்திய பரபரப்பான பேச்சுவார்த்தை

 

மோல்டாவில் இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் சுமார் 11 மணி நேரம் நடத்திய பரபரப்பான பேச்சுவார்த்தை

இந்திய ராணுவம் லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இருநாட்டு வீரர்களும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். மேலும் லடாக் எல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் சீனா ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் அந்த பகுதிகளில் வீரர்களை குவித்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

மோல்டாவில் இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் சுமார் 11 மணி நேரம் நடத்திய பரபரப்பான பேச்சுவார்த்தைஇதனையடுத்து எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இரு நாடுகளும் ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை முடிவு செய்தன. இதனையடுத்து சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மோல்டாவில் கடந்த 6ம் தேதியன்று 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையில் இந்திய தூதுக்குழு மோல்டாவுக்கு சென்றது. லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இரு தரப்பும் படைகளை பின் வாங்க ஒப்புக்கொண்டன.

மோல்டாவில் இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் சுமார் 11 மணி நேரம் நடத்திய பரபரப்பான பேச்சுவார்த்தைஇந்த சூழ்நிலையில் கடந்த 15ம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும உயிர் சேதம் ஏற்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. மேலும் சீனா எல்லையில் படைகளை குவித்தது. சீன போர் விமானங்கள் இந்திய எல்லை பகுதிகளில் வட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று மீண்டும் 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையில் இந்திய தூதுக்குழு மால்டாவில் சீன ராணுவ தரப்பை சந்தித்து பேசியது. நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 11 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் வீரர்கள் ஆயுதங்கள் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் எல்லைகட்டுப்பாட்டு நிச்சயிக்கப்பட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்வது, இந்திய எல்லைக்கு அருகே சீன விமான படையை குவித்து இருப்பது உள்பட பல விஷயங்களை இந்திய தரப்பு விவாதித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இரு தரப்பும் ராணுவமும் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.