யாஸ் புயல் பாதிப்பு… ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு!

 

யாஸ் புயல் பாதிப்பு… ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு!

கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. இதற்கு யாஸ் என பெயரிடப்பட்டது. இந்தப் புயல் ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்ததன்படி, நேற்று முன்தினம் சுமார் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி கரையை கடந்தது. இதனால், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

யாஸ் புயல் பாதிப்பு… ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு!

ஒடிசாவில் 6 லட்சம் பேரும் மேற்கு வங்கத்தில் 11 லட்சம் பேரும் யாஸ் புயலால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அம்மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மோடி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு புயல் நிவாரண பணிகளுக்காக தலா ரூபாய். 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

யாஸ் புயல் பாதிப்பு… ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு!

புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.