உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம் சமனில் முடியுமா?

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம் சமனில் முடியுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையினால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான சனிக்கிழமை டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி 92.1 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களை மட்டுமே எடுத்தது.

Image

நியூசிலாந்து அணியின் தரப்பில் அற்புதமாக பந்துவீசிய ஜெமினி சீசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பிறகு தனது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 49 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டிய முடிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலையிலிருந்து மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்றைய நாளாவது நாள் ஆட்டமும் கைவிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் ஆட்டம் மற்றும் 4-வது நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளதால் ‘ரிசர்வ் டே’ எனப்படும் ஆறாவது நாளுக்கு டெஸ்ட் போட்டி செல்ல உள்ளது.
நல்ல வேளையாக அடுத்த இரண்டு நாளுக்கு மழை பெய்ய வாய்ப்பு குறைவு என வானிலை அறிக்கை கூறியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இன்னும் நியூசிலாந்து அணியே தனது முதல் இன்னிங்சை முடிக்காத நிலையில் இன்னும் இரண்டு நாள் மட்டுமே இருப்பதால் ஆட்டம் சமனில் முடிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் ஏதாவது ஒரு அணி ஆதிக்கம் செலுத்தினால் போட்டி வெற்றியில் முடிய வாய்ப்புள்ளது என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்