’10-ம் வகுப்பு தேர்ச்சி அறிவிப்பில் உள்ள குழப்பத்தை அரசு சரிசெய்ய வேண்டும்’ எழுத்தாளர் சங்கம் வேண்டுகோள்

10-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு உண்டா… இல்லையா என்ற பெரிய விவாதத்திற்குப் பின் பொதுத்தேர்வை ரத்து செய்தது தமிழக அரசு. மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சியை முடிவு செய்ய வழிகாட்டியிருந்தது. அதில் உள்ள சில குழப்பங்களை சரிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்ப்பில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

அவர்களின் விடுத்துள்ள அறிக்கையில், “கொரானா ஊரடங்குக்காலத்தில் பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என்று மாணவர் நலனில் அக்கறையுள்ள பலரும் வலியுறுத்தியதன் பேரில் தமிழக அரசு தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவருமே தேர்ச்சிபெற்றதாக அறிவித்தது. ஆனால், இந்த ஆரவாரமான அறிவிப்பு நடைமுறைக்கு வரும்போது காலாண்டு மற்றும் அரையாண்டுத்தேர்வு மதிப்பெண், வருகைப்பதிவேடு அடிப்படையில் தான் தேர்ச்சி என்றாகியுள்ளது. மேலும், பல்வேறு காரணங்களால் காலாண்டு அல்லது அரையாண்டுத் தேர்வினை எழுதத்ததவறிய மாணவர்கள் மற்றும் நேரடியாக பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் ஆகியோரின் தேர்ச்சிநிலை என்னவென்று இன்னமும் தெளிவுபடுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது.

மேலும், மும்பையில் இயங்கும் இரண்டு பள்ளிகளின் மாணவர்கள் உள்ளிட்ட 190 பேர் தனித் தேர்வர்களாக தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 1989ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பொதுத்தேர்வு நடக்கும்போதே மும்பையிலும் தேர்வை நடத்தி தமிழகத்தில் தேர்வு முடிவு அறிவிக்கும்போதே மும்பை தேர்வர்களுக்கான முடிவையும் அறிவிக்கின்ற கடந்தகால நடைமுறை இவ்வாண்டும் கடைபிடிக்கப்படும் என்று இந்த 190 பேரும் காத்திருந்தனர். ஆனால் இவர்களது தேர்ச்சிநிலையும் இன்னமும் தெளிவுடுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது. எனவே, பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி என்கிற அறிவிப்பானது பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் அனைவருக்குமே நிபந்தனையற்று பொருந்தும் என்று தெளிவுபடுத்தி உத்தரவினை வெளியிடுமாறு தமிழக அரசை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

இதுவரை உலகளவில் 1.86 கோடி பேருக்கு கொரோனா!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால்...

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை இதுவரை உலகம் முழுவதும்...

ஆசைவார்த்தை… 9 மாதமாக உல்லாசம்… கர்ப்பமான 13 வயது சிறுமி!- போக்ஸோவில் சிக்கிய இளைஞர்

ஆசைவார்த்தை காட்டி 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்தனர். மயிலாடுதுறை அருகே திருவெண்காடு பஞ்சந்தாங்கி தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் அருண் (26). டைல்ஸ் வேலை பார்த்து...

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...