#BREAKING 18 வயது நிரம்பிய அனைவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி

 

#BREAKING 18 வயது நிரம்பிய அனைவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறாது. முதல் கட்டமாக நாடு முழுவதும் முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது. தற்போது 2-வது கட்டமாக கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோர், 59வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள http://cowin.in என்ற வலைதளத்தில முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அடையாள அட்டையுடன் தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு பிற்பகல் 3மணிக்கு மேல் போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

#BREAKING 18 வயது நிரம்பிய அனைவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி திட்டத்தின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தலைவிரித்தாடுவதையடுத்து, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கூடுதல் தடுப்பூசிகளை கொள்முதல் செய்தவதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது,