மொத்த விலை பணவீக்கம் 0.16 % உயர்வு – 4 மாத தொடர் சரிவுக்கு பிறகு உயர்வு

மொத்த விலை பணவீக்கம் 0.16 % உயர்வு – 4 மாத தொடர் சரிவுக்கு பிறகு உயர்வு

கடந்த 4 மாதங்களாக தொடர் சரிவை கண்டு வந்த மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஆகஸ்டில் 0.16 சதவீதம் உயர்ந்துள்ளது.

மொத்த விலை பணவீக்கம் 0.16 % உயர்வு – 4 மாத தொடர் சரிவுக்கு பிறகு உயர்வு

உள்நாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை அபிவிருத்தி துறை மாதந்தோறும் இந்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர அடிப்படையிலான மொத்தபணவீக்கம் 0.16 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டில் இது 1.17 சதவீதமாக இருந்தது.

மொத்த விலை பணவீக்கம் 0.16 % உயர்வு – 4 மாத தொடர் சரிவுக்கு பிறகு உயர்வு

இதனிடையே, நடப்பாண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு, ஏப்ரல் (-)1.57 சதவீதம், மே (-)3.37 சதவீதம், ஜூன் (-) 1.81 சதவீதம், ஜூலை (-) 0.58 சதவீதம் என தொடர்ந்து 4 மாதங்களாக, மாதாந்திர அடிப்படையிலான மொத்த விலை பணவீக்கம் சரிவை சந்தித்து வந்தது .
இந்த நிலையில், ஸ்டீல் 0.16 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உணவுப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களுக்கான தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்துள்ளதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

முத்துக்குமார்