அந்த கவிஞர் ரொம்ப ரொம்ப கெட்டவர் என்று தெரிந்தால் அவரது படைப்புகளை நிராகரித்து விடுவீர்களா? சித்தார்த் -பார்வதி பரபரப்பு

அந்த கவிஞர் ரொம்ப ரொம்ப கெட்டவர் என்று தெரிந்தால் அவரது படைப்புகளை நிராகரித்து விடுவீர்களா? சித்தார்த் -பார்வதி பரபரப்பு

கவிஞர் வைரமுத்துவுக்கு அண்மையில் கேரளாவில் இருந்து ஒஎன்வி விருது அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. வைரமுத்துவுக்கு அந்த விருது வழங்கப்படுவதற்கு நடிகை பார்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வைரமுத்து – பாடகி சின்மயி விவகாரத்தை மனதில் வைத்துதான் சின்மயி அந்த எதிர்ப்பினை தெரிவித்தார்.

அந்த கவிஞர் ரொம்ப ரொம்ப கெட்டவர் என்று தெரிந்தால் அவரது படைப்புகளை நிராகரித்து விடுவீர்களா? சித்தார்த் -பார்வதி பரபரப்பு

ஒ.என்.வி ஐயா எங்களுடைய பெருமை. ஒரு கவிஞராக, பாடலாசிரியராக அவர் வழங்கிய பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. அப்படி இருக்கும்போது பாலியல் தாக்குதல் குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரில் அத்தகைய விருதை வழங்குவது மிகவும் அவமானத்துக்குரியது என்றார் பார்வதி. மேலும் சில மலையாள நடிகைகளும் இதையே சொல்லி எதிர்ப்பு தெரிவித்ததால், வைரமுத்துவுக்கு விருது அளிப்பது பெரும் சர்ச்சை ஆனது. இதையடுத்து வைரமுத்துவுக்கு அந்த விருதினை வழங்கலாமா என்று விருது குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதனால், அந்த விருதினை வேண்டாம் என்று வைரமுத்துவே மறுத்துவிட்டார்.

அந்த கவிஞர் ரொம்ப ரொம்ப கெட்டவர் என்று தெரிந்தால் அவரது படைப்புகளை நிராகரித்து விடுவீர்களா? சித்தார்த் -பார்வதி பரபரப்பு

பாடகி சின்மயி தவிர மேலும் சில பெண்களும் மீடூ மூலமாக 2018ம் ஆண்டில் வைரமுத்து மீது புகார் எழுப்பியபோது, விசாரிக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் நடிகர் சித்தார்த்.

சித்தார்த்தும் , பார்வதியும் தற்போது நவரசா திரைப்படத்தில் நடித்துள்ளனர். அது குறித்து இருவரும் ஒரு இணையவெளி உரையாடலின்போது, கேன்சல் கல்ச்சர் குறித்து பேசினர்.

அந்த கவிஞர் ரொம்ப ரொம்ப கெட்டவர் என்று தெரிந்தால் அவரது படைப்புகளை நிராகரித்து விடுவீர்களா? சித்தார்த் -பார்வதி பரபரப்பு

அப்போது சித்தார்த், ‘’ ஒருத்தர் பெரியர் கவிஞர். அவர் எழுதிய கவிதைகளை பார்த்துதான் பசங்க வளர்ந்திருக்காங்க. அவர் எழுதிய கவிதையை கேட்டு லவ் பண்ணியிருக்காங்க. அவர் எழுதிய கவிதையை கேட்டு கல்யணாம் பண்ணியிருக்காங்க. அவர் எழுதிய கவிதையை கேட்டு பர்ஸ்ட் நைட் கொண்டாடியிருக்காங்க. அவர் எழுதிய கவிதையை கேட்டு குழந்தை பெத்துக்கிட்டிருக்காங்க.

அந்த கவிஞர் ரொம்ப ரொம்ப கெட்டவர் என்று தெரிந்தால் அவரது படைப்புகளை நிராகரித்து விடுவீர்களா? சித்தார்த் -பார்வதி பரபரப்பு

அந்த கவிஞர் ரொம்ப ரொம்ப கெட்டவர் என்று தெரிந்தால் அவரது படைப்புகளை நிராகரித்துவிடுவீர்களா? அந்த கவிதைகளை மதிப்பதை நிறுத்திவிடுவீர்களா? ஆர்ட் தனி ஆர்ட்டிஸ்ட் தனி என்று பிரிக்க முடியுமா? ஒருவர் கெட்டவர் என்று தெரிந்தால் அவரது படைப்புகள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்கிற இடத்திற்கு வந்துவிட்டோமா? என்பதை ஒவ்வொருத்தரும் தனித்தனியாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். கும்பலாக யோசித்தால் முடிவெடுக்க முடியாது’’என்கிறார்.