மியான்மரில் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பி ஓட்டம்; சிறைக் காவலர் காயம்

 

மியான்மரில் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பி ஓட்டம்; சிறைக் காவலர் காயம்

மியான்மரில் சிறைக் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியதால் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பினர்.

யங்கூன்: மியான்மரில் சிறைக் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியதால் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பினர்.

மியான்மரில் ஹபா-அன் என்ற இடத்தில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர் அது பெரும் கலவரமாக மாறியது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

அதை பயன்படுத்தி கொண்ட சில கைதிகள் சிறை வளாகத்தை உடைத்துக் கொண்டு வெளியேறினர். அவர்களை தடுத்த சிறை அதிகாரியை அவர்கள் பயங்கரமாக தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, கிழக்கு கரோன் மாகாணத்தில் இருந்து சிறைக்கு வந்த லாரியை மடக்கி அதில் ஏறி 41 கைதிகள் தப்பினர்.

இதையடுத்து கைதிகளை தேடும் பணி நடந்ததில் 3 கைதிகள் மட்டுமே பிடிபட்டனர். இந்நிலையில், எஞ்சியுள்ள கைதிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்கத்து கிராமங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் காணப்பட்டதால் தகவல் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.